கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

dmk-stalin-cover

கொஞ்சமாடா…பேசுனீங்க…பழிவாங்கும் ஸ்டாலின்!

makkal-nala-kootani

கடந்த 2016ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலை, தற்போதுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார். அதிலும், மக்கள் நல கூட்டணி, ஸ்டாலினை படாத பாடு படுத்தி விட்டது.

makkal_nala_kootani 2.

அன்றைய ஆளுங்கட்சி, அதிமுக தனித்து 234 தொகுதிகளிலும் நின்றது. திமுகவுடன், காங்கிரஸ் மட்டுமே கூட்டணியில் இருந்தன. மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் மாநில காங்கிரஸ், போன்ற  அணைத்து கட்சிகளும், தேமுதிகவுடன் மூன்றாவது அணி அமைத்து, அதற்கு ‘மக்கள் நல கூட்டணி’ என பெயர் வைத்து தேர்தலை கண்டது.

JAYALALITHAA_2016

அதிமுகவை பொருத்தவரை, அன்றைய முதல்வர் மறைந்த ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாத போதிலும், மேடை அமைத்தும் வாகனத்தில் அமர்ந்தும், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கொண்டுவந்த ‘அம்மா உணவகம்’ போதும், அவரின் வெற்றி வாய்ப்புக்கு.

DMK-President-M-Karunanidhi.

ஆனால், திமுக அப்படியில்லை…. அன்றைய எதிர்க்கட்சி தலைவரும், திமுகவின் தலைவருமான கருணாநிதி மிகுந்த உடல் நலம் குன்றி இருப்பதால், நேரடியாக பிரசாரம் செய்ய முடியவில்லை. அதே போல், எதை வைத்து ஓட்டுக்களை பெருவது என்பதும் திமுகவில் பெரும் குழப்பமாக இருந்தது. அதிமுகவின், அரசை விமர்சித்து மட்டுமே பிரச்சாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். இது வாக்களிக்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லை.

vijaya-kanth-makkal-nala-kottani

‘மக்கள் நல கூட்டணி’ 50 ஆண்டுகால திமுகவும், அதிமுகவும், தமிழகத்தை அழித்து விட்டது. இவர்களால், தமிழ்நாட்டிற்கு பெரிய திட்டங்களை எதுவும் செய்ததில்லை, போன்ற பிரசாரங்களை செய்தார்கள். அதிமுகவை விமர்சித்ததை விட, திமுகவை விமர்ச்சித்ததுதான் அதிகம். அதனால் தான் தற்போது ஸ்டாலின் கோபமாக இருக்கிறாரா? என்று நீங்கள் கேட்டால், இல்லவே இல்லை….

vaiko

2016 தேர்தலில், மீண்டும் முதல்வரானார் மறைந்த ஜெயலலிதா. ஆனால், அதிமுகவுக்கும், திமுகாவிற்கும் பெரிய ஓட்டு  வித்யாசம் இல்லை. சொல்ப்ப ஓட்டு வித்யாசத்தில் தான் அதிமுக வென்றுள்ளது. இன்று கூட்டணிக்காக காத்திருக்கும் கட்சிகள், அன்று மக்கள் நல கூட்டணியில் இணையாமல் திமுகவிற்கு ஆதரவை தெரிவித்திருந்தால், மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆகியிருக்க வாய்ப்புள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஸ்டாலின், மதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உடன்பட வில்லை என்று கூறுகிறார்கள்.

MDMK_Logomarch31

இது ஒருபுறமிருக்க, சட்டசபை தேர்தலில் தனிச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என மதிமுக பொது செயலர் வைகோ விடாப்பிடியாக தெரிவித்துள்ளார். முதலில், இவருக்கு தொகுதி ஒதுக்க வேண்டும். பின்னர் தான் சின்னம், என திமுக விசுவாசிகள் முணுமுணுத்தனர்.

dmk with vsika

ஆனால், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6 சீட் ஒதுக்குவதாக, திமுக முடிவு செய்துவிட்டதாம். ‘ஸ்டாலினிடம் மன்னிப்பு கேட்டுருப்பாரோ? நமக்கெதுக்கு….

பாவம், அப்படியே மற்ற கட்சியையும் மன்னித்து உங்க கூட்டணியில் சேர்த்துக்கோங்க… ஸ்டாலின் சார்!

 

மேலும் படிக்க: 

அரசு பேருந்துகளில் போஸ்டர் ஒட்டும் அதிமுக|அதிகாரம் துஷ்பிரயோகம்!

அன்றும் இன்றும் பச்சோந்தி கருப்பையா!

 

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top