விஜய் படத்தில் 4 கதாநாயகிகளா?

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரானவர் A.L.விஜய். தலைவா, சைவம், தேவி போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் சாய்பல்லவியை வைத்து “தியா” என்ற படத்தை இயக்கினார். அது வெளியாகி ஓரளவிற்கு ஓடியது. 
தற்போது இவர் இயக்கி முடித்துள்ள ’தலைவி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப்படம் மறைந்த முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எதுக்கப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர்.-ஆக அரவிந்த் சாமி நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் வெளியிட திட்டமிட்டு இருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
October 31 Ladies Night: Megha Akash, Nievtha Pethuraj, Manjima Mohan and Reba John in AL Vijay’s next

இந்த நிலையில் இயக்குநர் விஜய் அடுத்ததாக தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார். இது ஒரு ஓட்ட OTT தளத்திற்காக உருவானதாம். இந்த படம் நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டது என்பதால் இந்தப் படத்தில் நான்கு முக்கிய நடிகைகள் நடித்து இருக்கிறார்கள்.


நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர்தான் அந்த நான்கு முக்கிய நடிகைகள். பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் இந்தப் படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
மேலும், இந்தப் படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்பதால் ’தலைவி’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இத்திரைப்படம் OTT-யில் வெளியாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top