பொய்க்கு பரிசா?|என்னய்யா சொல்றீங்க?

அமைச்சர் நிதின் கட்காரி
“சாலை பாதுகாப்பில், தமிழகம் முன்னணி மாநிலமாக செயல்படுவதாகவும், பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்திருக்கிறார். எந்த ஆய்வின் அடிப்படையில் கட்காரி தெரிவித்திருக்கிறார் என்பது தெரியவில்லை. சென்னையில் பல பகுதியில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

velachery

vadapazhani
இது தொடர்பான செய்திகளை நம் சென்னையில் டாட் காமில் பலமுறை வெளியிட்டுள்ளோம். அதுவும் மழை காலங்களில், மழை நீரானது சாலை முழுவதிலும் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த ஆபத்தான சூழலே நிலவுகிறது. கோடம்பாக்கம் சிக்னலில், சிக்னல் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது, இதனை இன்றும் நாம் காணலாம். கோடம்பாக்கத்தில், சிக்னல் பழுதடைந்து இருப்பதை நாம் பலமுறை செய்தியினை வெளியிட்டு சுட்டிக்காட்டியுள்ளோம். ஆனால் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. தற்போது ஆபத்தான சூழலில், வாகன ஓட்டிகள் சென்று வருகின்றன.

vadapalani bus stand

kodambakkam valluvar kottam signal
சரி…அது போகட்டும். சாலை பாதுகாப்பில், சிறந்து விலங்கியதற்கு எதற்கு பரிசு? ஆம்…சாலை பாதுகாப்பில் சிறந்து விலங்கிய தமிழகத்திற்கு, மத்திய அரசு பரிசு தொகையினை வழங்கியிருக்கிறது. உண்மையாகவே தமிழகம், சாலை பாதுகாப்பில் முதன்மையாகவே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்…அரசு தன் கடமையை தானே செய்தது, அதற்கு எதற்கு பரிசு தொகை? அதனை தமிழக அரசும் மறுக்காது ஏற்றுக்கொண்டதுதான் சிரிப்பாக இருக்கிறது.
சாலை விபத்துக்களில், ஏழை மக்களுக்கு, மருத்துவ காப்பீடு சென்றடையாதது, வருத்தம் அளிப்பதாக உள்ளது என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். ‘அமைச்சரே..! சாலை விபத்து, தற்சயலாக நடப்பதை விட, மதுவை குடித்து விட்டு அதனால் ஏற்படும் விபத்தே அதிகம். ஆண்டிற்கு இந்தியாவில் 2.6 லட்சம் பேர் இறக்கின்றன, உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதை பற்றி அமைச்சருக்கு வருத்தமில்லையா? சமீபத்தில் இது பற்றி வருத்தம் தெரிவித்து,’தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது’ என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

In 2019
சாலை விபத்துகளில், 80-90 சதவீதம் வரை ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.என்று கூறும் கட்கரி, அந்த ஏழை மக்கள் எப்படி விபத்தில் சிக்குகிறார்? என்பதனை யோசிக்கவேண்டாமா? தயவுசெய்து, யோசிங்கள்..!
இன்னும் நாம், அடைப்படை வசதியான சாலை வசதிக்கூட திருப்திகரமாக இல்லை என்பது வேதனை தரக்கூடிய விஷயமாக உள்ளது.
மேலும் படிக்க: