Main Menu

What’s New?

Connect With Us

நாட்டின் 74ஆம் ஆண்டு சுதந்திர விழா கொண்டாடப்பட்டது 4-வது முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்தார் முதல்வர்!

Read Carefully

SHARES

நாட்டின் 74ஆம் ஆண்டு சுதந்திர விழா கொண்டாடப்பட்டது.சென்னை கோட்டை கொத்தளத்தில் 4-வது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.பின்னர் உரையாற்றிய முதல்வர்,4-வது முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்ததில் பெருமை அடைகிறேன் என்றார்.நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தினம் வாழ்த்துகளை தெரிவிட்டுக்கொள்கிறேன்.

மக்களின் அன்பு,ஆதரவை பெற்றுள்ள நான்,மக்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன் என்றார்.மத்திய அரசு எடுக்கும் அணைத்து நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருப்போம்.சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.16,000-லிருந்து ரூ.17,000-ஆக உயர்த்தப்படுகிறது.தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.8,000-லிருந்து ரூ.8,500-ஆக உயர்த்தப்படும் என்றார்.

கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள்,சுகாதாரப் பணியாளர்கள்,தூய்மைப் பணியாளர்கள்,உள்ளாட்சி,வருவாய்த்துறை,காவல்,தீயணைப்புத்துறை மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.

Top