Main Menu

What’s New?

Connect With Us

61 ஆண்டுகள் திரை பயணத்தை நிறைவு செய்துள்ள உலக நாயகன்!

Read Carefully
SHARES

ஒரு நடிகர் 61 ஆண்டுகள் நிலைத்து இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்த ஒருவர் இன்று உலகளவில் பேசப்படும் நடிகராக வலம் வருவது, அதிசயத்திலும் அதிசயம்.1960ஆம் ஆண்டு “களத்தூர் கண்ணம்மா”என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று உச்ச நட்சத்திரமாக மாறி இருப்பது,அதிசயத்திலும் அதிசயம்.அந்த நடிகர் வேற யாருமில்லை நம் உலக நாயகன்,பத்மஸ்ரீ,பத்மபூஷன்,டாக்டர்.கமலஹாசன் தான்.
“களத்தூர் கண்ணம்மா”வில் தொடங்கிய கமலின் பயணம் 61 ஆண்டுகள் கடந்து விட்டது.இன்றுடன் கமல் தன் திரை பயணத்தை 61 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டார்.12.8.1960ஆம் ஆண்டு “களத்தூர் கண்ணம்மா”திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் கமல்.முதல் படத்திலேயே அந்த ஆண்டிற்கான சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி விருது (தேசிய விருது) அப்போதைய ஜனாதிபதியான இராதாகிருஷ்ணன் அவர்களிடமிருந்து பெற்றார் கமல்.அதன் பின் தொடர்ந்து 5 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்திருந்தார்.

1973ல் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “அரங்கேற்றம்”என்னும் திரைப்படம் மூலமாக வாலிப தோற்றத்தில் அறிமுகமானார்.“பருவகாலம்”,“குமாஸ்தாவின் மகள்”,”கன்னியாகுமரி”,”அன்புத்தங்கை”,போன்ற பிற இயக்குனர்களின் படங்களில் நடித்திருந்தாலும்,கே.பாலச்சந்தர் இயக்கத்தில் “நான் அவனில்லை”,”அவள் ஒரு தொடர்கதை”,”அபூர்வ ராகங்கள்”,”மூன்று முடிச்சு”,”அவர்கள்”,போன்ற திரைப்படங்களே கமலுக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.
1977ஆம் ஆண்டு இயக்குனர் இமையம் பாரதிராஜா இயக்கிய “பதினாறு வயதினிலே” படத்தில் கமல் நடித்து புகழ் பெற ஆரம்பித்தார்.1980க்கு பின் கமல் அசுர வளர்ச்சி அடைய ஆரம்பித்தார்.கமலின் திரை வாழ்க்கையை “நாயகன்” திரைப்படத்திற்கு முன்,பின்,என இரண்டாக பிரிக்கலாம்,காரணம் கமல் நடித்த “நாயகன்” திரைப்படம் கமலை ஆஸ்கர் வரை கொண்டு சென்றது.ஆனால் கமல் இப்படத்திற்கு ஆஸ்கர் வாங்கிருக்க வேண்டும்.கமல் இன்னும் ஆஸ்கர் வாங்காதது,ஆஸ்கர் விருது வழங்கும் குழு ஏதோ அரசியல் செய்கிறதோ? என்றே நினைக்க தோன்றுகிறது.

1996ல் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன்” திரைப்படத்தில் மாறுப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தார் கமலஹாசன்.இப்படமும் ஆஸ்கர் வரை சென்றது.அதன் பின் “அவ்வை சண்முகி”,”காதலா காதலா”,”ஹேராம்”,”தெனாலி”,”ஆளவந்தான்”,”பம்மல் கே. சம்பந்தம்”,”பஞ்சதந்திரம்”,”அன்பே சிவம்”,போன்ற படங்களில் நடித்து உச்ச நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.இதில் கமலுக்கு சில தோல்வி படங்கலும் உண்டு.ஆனால் அதை பற்றி கவலை படாது கலையின் மீது கொண்ட காதலால்,தான் சம்பாதித்த பணத்தை மீண்டும் சினிமாவில் முதலீடு செய்து தன் ரசிகர்களுக்கு புதுமையான,வித்யாசமான திரைப்படங்களை கொடுப்பார் கமல்.
2008ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்,“தசாவதாரம்” என்னும் திரைப்படத்தில் பத்து கதாபாத்திரத்தில் நடித்து உலக சாதனை படைத்தார் கமலஹாசன்.இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் ஜப்பான் சூப்பர்ஸ்டார் ஜாக்கிஜான் வந்து இசை வெளியிட்டார்.இதனை அப்போது உலக சினிமா,தமிழ் சினிமா மீது பொறாமைக்கொண்டது.ஜாக்கிஜானை பார்த்து அல்ல “தசாவதாரத்தில் கமலின் நடிப்பை பார்த்து.

2013ஆம் ஆண்டு கமல் “விஸ்வரூபம்” என்ற திரைப்படத்தில் விஸ்வரூபம் எடுத்தார்.இப்படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்ப்படவே,”இப்படம் வெளியாகவில்லை எனில் நான் இந்தியாவை விட்டு வெளியேறுவேன்”,என அதிரடித்தார்.சிக்கல் விலக,படம் வெளியாகி ஓடியது.ஆனால் “விஸ்வரூபம்-2” எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை!
தற்போது “இந்தியன்-2”,“சபாஷ் நாயுடு”,என இரு படங்கள் கமல் கையில் உள்ளதாக கேள்வி.இதில் “இந்தியன்-2” படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டுயிருந்தது.சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிக பெரிய விபத்து நடந்து இருவர் பலியாகினர்.இந்த விபத்தில் கமல் உயிர் தப்பியதே பெரிய விஷயமாம்.இதனால் படப்பிடிப்பு பாதியில் நின்றது.மேலும் கொரோனா காரணமாகவும் படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.

2018ஆம் ஆண்டு மதுரையில் பொதுக்கூட்டத்தை கூட்டிய கமல் தான் அரசியலுக்கு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என அறிவித்து,கட்சியின் பெயர்“மக்கள் நீதி மய்யம்”எனவும்,அதே கூட்டத்தில் கட்சிக்கான கொடியையும் வெளிட்டு, அதனை ஏற்றியும் வைத்தார்.சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நின்ற “மக்கள் நீதி மய்யம்” கணிசமான ஓட்டுக்களை வாங்கியது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் “மக்கள் நீதி மய்யம்” போட்டியிட தயாராகி வருகிறது.கமலஹாசனின் இந்த 61 ஆண்டுகால திரை சாதனையை வாழ்த்தியும்,அடுத்த வரும் ஆண்டுகளில் அரசியல் சாதனையை செய்ய வாழ்த்தியும்,வாழ்த்துகளையும் Chennaiyil.com தெரிவித்துக்கொள்கிறது.

கமலஹாசனின் சில குறிப்புகள்:
4 தேசிய விருதுகளும், சிறந்த படம் என்ற முறையில் தயாரிப்பாளராக 1 தேசிய விருதும், 10 தமிழக அரசு திரைப்பட விருதுகளும்,4 ஆந்திர அரசின் நந்தி விருதுகளும், 19 பிலிம்பேர் விருதுகளும் உள்ளடங்கலாக பல இந்திய விருதுகளையும் வென்றுள்ளார்.இவர் சிறந்த பிறமொழிப்படத்திற்கான, அகாதமி விருதிற்கு இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் அதிகமானவற்றிலும் நடித்துள்ளார்.நடிகராக மட்டுமல்லாது திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.கமல்ஹாசன், தமிழ் தவிர இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், வங்காளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.
இவர் 2019 ஆம் ஆண்டுவரை 220 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

1960 – தமிழ்த் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1962 – மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக‌ அறிமுகம்
1976 – தெலுங்குத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 – வங்காளத் திரைப்படங்களில் அறிமுகம்
1977 – கன்னடத் திரைப்படங்களில் அறிமுகம்
1981 – இந்தித் திரைப்படங்களில் அறிமுகம்
20 படங்களை தயாரித்துள்ளார்.
28 படங்களுக்கு திரைக் கதை எழுதியுள்ளார்.
5 படங்களை இயக்கியுள்ளார்
விஜய் டிவில் வரும் “பிக் பாஸ்” என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழகினார்.


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top