Main Menu

What’s New?

Connect With Us

Tamil Cinema Update

Read Carefully

SHARES

2018ம் ஆண்டு வெளி வந்த “ராட்சசன்” திரைப்படம் மிக பெரிய வெற்றிபெற்றது.இதற்கு காரணமாக கூறப்படுவது,வித்தியாசமான கதையும்,த்ரில்லான திரைக்கதையும்,படத்திற்கு தேவையான காட்சிகளை எடுத்ததும்தான்.2019 வரை த்ரில்லான திரைப்படம் அதிகமாக வந்தாலும், இன்று வரை “ராட்சசன்” திரைப்படத்தை குறிப்பிட்டு பேசி வருகிறார்கள்.45 கோடிக்கும் மேல் வசூல் சாதனைகளை படைத்திருக்கிறது.மிகவும் செலட்டிவ்வான கதைகளை தேர்வு செய்யும் “ராட்சசன்” திரைப்படத்தின் இயக்குனர் ராம்குமார்.தற்போது தனுஷய் வைத்து படம் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்க உள்ளது.இந்த படத்தை தெலுங்கு,இந்தி,மலையாளம்,கன்னட மொழியிலும் ஒரே சமயத்தில் உருவாக்க உள்ளனர்.பேன்டசி கதை கொண்ட படமாக இது உருவாகிறது.

நடிகர் சத்தியராஜின் மகனும் நடிகருமான சிபிராஜ்,மிக திறமையான நடிகரும் கூட ஆனால் சமீப காலமாக அவரின் திரைப்படங்கள் பேசும் படியாக அமையவில்லை.ஆனால் “நாய்கள் ஜாக்கிரதை”,”ஜாக்சன்துரை”,”சத்தியா”,போன்றப்படங்கள் சிபிராஜுக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது.தற்போது தனது 36வது பிறந்த நாளை சிபிராஜ் சமீபத்தில் கொண்டாடினார்.அதே தினத்தில் அவர் நடித்துள்ள “கபடதாரி” படத்தின் பர்ஸ்ட்லுக்கை சூர்யா வெளியிட்டுள்ளார்.இப்படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இப்படத்தின் எதிர்பார்ப்புகள் இப்போதே அதிகமாகியுள்ளது.

2016ல் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்கின்ற தனியார் நிறுவன ஊழியரை,ராம்குமார் என்கின்ற வாலிபர் கொலை செய்ததாக கூறப்படுகிறது.இது சம்மந்தமாக விசாரணை நடந்து வந்த நிலையில்,சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துக்கொண்டதாகவும்,அவர் இறந்து விட்டதாகவும் கூறினார் காவல்தரப்பில்.ஸ்வாதி கொலை,ராம்குமார் தற்கொலை,என இந்த கொலை சம்மந்தமாக பல குழப்பங்கள் இருக்கும் சூழலில் இக் கொலையை மையமாக வைத்து படங்களை இயக்க,இயக்குனர்களின் மத்தியில் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் ஸ்வாதி கொலை வழக்கு சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகி உள்ள படம்”நுங்கம்பாக்கம்”.புதுமுகங்கள் நடித்துள்ளனர்.நீண்ட காலமாக திரைக்கு வராமல் இருந்த இப்படம்,இப்போது ஓ.டி.டியில் ரிலீஸ் ஆகிறது.

Top