2 வயது சிறுமிமிக்கு கீழ்முதுகில் முள்ளெலும்பு நழுவல் : காவேரி மருத்துவமனையில் வெற்றிகரமான சிகிச்சை.
i. முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் இத்தகைய முள்ளெலும்பு நழுவல் (Spondylolisthesis) பாதிப்பு ஏற்படுவது குழந்தைகள் மத்தியில் மிக அரிதாகும்.
ii. கீழ்முதுகில் முள்ளெலும்பு நழுவல் பாதிப்பு கடும் வலியை விளைவிப்பதால் நகர்வுத்திறனில் அதிக சிரமத்தை உருவாக்குகிறது.
iii. உலகளவில் இதுவரை இத்தகைய பாதிப்பிற்கான சிகிச்சை 3 வயதான குழந்தைக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.
சென்னை, 20, ஜனவரி 2021:
கீழ்ப்புற முதுகுத்தண்டில் அல்லது கீழ்முதுகில் முள்ளெலும்பு நழுவல் பாதிப்பு என்பது, ஒரு முள்ளெலும்பு மற்றொன்றின் மீது சரிந்து முதுகுத்தண்டு மற்றும் நரம்பின் வேர்ப்பகுதியில் அழுத்தத்தை விளைவிக்கிறது. விபத்து, சிதைவு அல்லது பிறவிக்கோளாறு ஆகியவற்றினாலேயே பொதுவாக ஏற்படுகிறது. வளரிளம் பருவத்தினர் முதிர்ச்சியடையும் வயது வந்த நபர்கள் ஆகியோரிடையேதான் இந்த பாதிப்புநிலை மிக பொதுவானதாக காணப்படுகிறது. கடுமையான அறிகுறிகளை விளைவிக்கின்ற இத்தகைய நிகழ்வு குழந்தைகளிடம் காணப்படுவது மிக அரிதானதாகும்.
தமிழ்நாட்டின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணி சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் காவேரி மருத்துவமனை, L5-S1 என்ற முள்ளெலும்பு மற்றொன்றின் மீது முழுமையாக சரிவடைந்திருக்கும் முள்ளெலும்பு நழுவல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்ட 2 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்திருக்கிறது. “அச்சிறுமிக்கு திடீரென முதுகு மற்றும் காலில் வலி உருவானது. இதன் காரணமாக அவளால் நகரவோ அல்லது நடக்கவோ இயலவில்லை. அதைத்தொடர்ந்து அவளது கீழ்முதுகில் கட்டி போன்ற ஒரு வீக்கம் உருவானது. இதனால் உள்ளுர் மருத்துவமனைக்கு இந்த சிறுமி உடனடியாக அழைத்து செல்லப்பட்டாள். எம்ஆர்ஐ ஸ்கேன் சோதனை மற்றும் அதற்குப் பிறகு வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதில் இக்குழந்தைக்கு கடுமையான தண்டுவட மற்றும் நரம்பு அழுத்த பாதிப்பு இருப்பதும் மற்றும் இதை சரிசெய்ய அறுவைசிகிச்சை அவசியம் என்பது உறுதி செய்யப்பட்டது என்று காவேரி மருத்துவமனையின் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை துறையின் தலைவர் டாக்டர். G . பாலமுரளி கூறினார்.
சிறுவயது குழந்தைகள் மத்தியில் இத்தகைய பாதிப்புநிலை ஏற்படுவது மிக அரிது. இத்தகைய கோளாறுக்கு ஒரு சிகிச்சை திட்டத்தை விவரணை செய்கின்ற ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவ சிகிச்சை விவரங்கள் என எதுவுமில்லை. இந்த இளம் வயதில் இப்பாதிப்பிற்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நேர்வுகள் வெகு சிலவே. “இந்த இளம் வயதில் முழு வளர்ச்சியடையாத மென்மையான எலும்புகள் என்பது, இதற்கு முக்கியமான சவாலாகும். அளிக்கப்பட்ட சிகிச்சையானது, குழந்தையின் பாதிப்பு நிலையை மிகத்துல்லியமாக சரிசெய்ததால் சிறப்பான சிகிச்சைப்பலன்கள் கிடைக்கப்பெற்றன. முதுகு அல்லது கால்வலி ஆகிய பிரச்சனைகள் இக்குழந்தைக்கு அதற்கு ஏற்படவில்லை.
அறுவைசிகிச்சைக்கு பின் :
அறுவைசிகிச்சை முடிந்து 2 மாதங்களுக்குப் பிறகு இக்குழந்தையால் நேராக நிமிர்ந்து நடப்பதும், அவளது வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வதும் சாத்தியமாகியிருக்கிறது என்று டாக்டர். பாலமுரளி விளக்கமளித்தார்.
மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த இந்த சிறுமியின் குடும்பத்தால் அறுவைசிகிச்சைக்கான செலவை செய்வதற்கு வசதியில்லை. எனவே ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் நார்த் -ன் ஒரு முனைப்புத்திட்டமான தளிர்கள், தமிழ்நாடு அரசு, காவேரி மருத்துவமனை மற்றும் குழுநிதியுதவி (Crowd Funding) வழங்கல் திட்டம் என பல்வேறு வழிமுறைகளின் மூலம் தேவையான தொகை சேகரிக்கப்பட்டு இந்த அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். மணிவண்ணன் செல்வராஜ் இந்த சிகிச்சை நேர்வின் தனிச்சிறப்பு பற்றி பேசுகையில், “இதுவரை இதே போன்ற பாதிப்பு நிலைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பது உலகளவில் 3 வயதான ஒரு குழந்தைக்கு மட்டுமே. 2 வயது குழந்தைக்கு காவேரி மருத்துவமனையில் தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சை, உலகளவில் இந்த சிறுவயதில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் முதல் நேர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து, எழுந்து நிற்கவோநடக்கவோ இயலாத கடுமையான வலியிலிருந்து விடுதலை அளித்திருக்கும் டாக்டர் பாலமுரளி மற்றும் அவரது குழுவினரை நான் மனதார பாராட்டுகிறேன்.” என்று கூறினார்.
Also Read: தடுப்பூசியை இவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது|தயாரித்த நிறுவனங்கள் எச்சரிக்கை!
Follow us on Facebook and Instagram: