Main Menu

What’s New?

Connect With Us

7ஜி ரெயின்போ காலனி : 16 வருடங்களை கடந்தது

Read Carefully

SHARES

 தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான காதல் படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன.    அதில் சில படங்கள் வெற்றியடைந்துள்ளன. சில படங்கள் தோல்வியை தழுவியுள்ளன. அவற்றில் சில படங்கள் மட்டுமே காவிய காதல் சினிமாவிற்கான அங்கீகாரம் பெற்றுள்ளன. அதில் முக்கியமாக, தமிழ் சினிமாவில் ரோஜா, மௌனராகம், மூன்றாம் பிறை, காதலுக்கு மரியாதை போன்ற படங்கள் இடம் பிடுத்துள்ளன. இவை மட்டுமின்றி, பல படங்கள் இடம் பிடித்துள்ளன. 

அந்த வரிசையில் 2004 -ஆம் ஆண்டு வெளிவந்த “7G ரெயின்போ காலனி திரைப்படம்.  செல்வராகவன் அவர்கள் இயக்கிய இந்த திரைப்படம் அன்றைய காலக்கட்டத்தில் வெளிவந்த காதல் படங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. 2004 அக்டோபர் 15 அன்று வெளிவந்த இத்திரைப்படம் நேற்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இவ்வளவு ஆண்டுகாலம் ஆனாலும் தற்போதுள்ள இளைஞர்களுக்கும் இத்திரைப்படம் விருப்பமான படமாக உள்ளது.

அப்படி என்ன இருக்கிறது இத்திரைப்படத்தில்? பார்ப்போம்…

செல்வராகவன் அவர்கள் இயக்கிய 2 -வது படம் இதுவாகும். இதற்கு முன் அவர் தனது தம்பி தனுஷ் -யை வைத்து இயக்கிய படம் “காதல் கொண்டேன்”. அதற்கு முன்னதாக அவர் எழுத்தில் வெளியான படம் “துள்ளுவதோ இளமை”. அதேபோலத்தான் இத்திரைப்படமும் இளமைப்பருவ காதலை பற்றியது. 

படத்தில், ஹவுசிங் போர்டுல் வாழும் குடியிருக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்தின் குடும்பம் மற்றும் இளைஞனின் வாழ்வியலை இயல்புத்தன்மையுடன் பதிவுசெய்திருப்பார்.

எளிமையான கதைக்களம் :

ஒரு இளைஞன் வேலைக்கு செல்லாமல், பெற்றோரின் நிழலில் வாழ்கிறான்.   அவன்தான் கதையின் நாயகன். காதலால் பொறுப்புள்ள மனிதனாக மாறுகிறான்.   பிறகு காதலியின் பிரிவால் மனமுடையாமல், வேறொரு பெண்ணை நாடாமல் தனது முழு மனதையும் காதலுக்காக அற்பணிக்கிறான்.     தீய பழக்கத்தில் நாட்டம் கொல்லாமல் காதலியின் நினைவுகளோடு வாழ்கிறான்.    அந்நினைவோடு ஒரு பொறுப்புள்ள மகனாக மாறுகிறான். 

பெண்ணின் அன்பு, ஒரு மனிதனை எவ்வாறு பொறுப்பாக மாற்றுகிறது. சமூகத்தில் ஒரு நல்லவனாக மாற்றுகிறது. அப்பெண்ணின் கண்டிப்பு, மற்றும் அன்பு ஆகியவை எவ்வாறு பொறுப்புமிக்க சமூக மனிதனாக மாற்றுகிறது என்பதை பதிவு செய்திருக்கிறார். 

படத்தில், குடியிருப்பில் நடக்கும் விழாவில் “ராஜா ராஜா ராஜனிந்த ராஜா” பாடல் பாடும் போதும், கிரிக்கெட் விளையாடும் போது நாடக்கும் நகைச்சுவைகள் அனைத்தும் நம் வாழ்வுடன் தொடர்புபடுத்தி கொள்ளமுடியும்.    அதனை அவ்வளவு இயல்பாக காட்சிபடித்திருப்பார் இயக்குனர். 

நடிப்பும், யுவனின் இசையும் :

முன்னதாக, இரண்டு படங்களில் தம்பியை வைத்து இயக்கியவர் இப்படத்தில் புதுமுகம் “ரவி கிருஷ்ணா” வை வைத்து இயக்கியுள்ளார். ஒரு நடுத்தர குடும்பத்தின் இளைஞனின் வாழ்க்கை, மற்றும் உடல்மொழியும், உச்சரிப்பும் வெகுவாக கவர்ந்தன.  காதல் கொண்டேன் படத்தின் நாயகி “சோனியா அகர்வால்” அவர்களே இத்திரைப்படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.  இதில் ஒரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனுக்கு அப்பாவாக நடித்துள்ள விஜயன், நண்பனாக நடித்த சுமன் ஷெட்டி, இருவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தினர். அப்பாவின் நடிப்பு, மகன் வேலைக்கு செல்லாமல் இருப்பதால் கோவத்தை முகத்திற்கு நேராக காட்டிவிட்டு. இரவில் மனைவியிடம் “அவனுக்குள்ள ஏதோ ஒன்னு இருந்திருக்குள்ள” என்று கண்ணீர் விடும் காட்சியில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார்.

கதாநாயகியின் தந்தை, தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இருவரும் சிறந்த நடிப்பை வெளிப்படித்திருந்தனர்.

 யுவன் சங்கர் ராஜா இசையில் அணைத்து பாடல்களும் அற்புதமாக அமைந்துள்ளன. குறிப்பாக “கண் பேசும் வார்த்தைகள்” பாடல் “நினைத்து நினைத்து பார்த்தேன் ” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்றன. இந்தப்படத்திற்கு மட்டும் 25 குட்டி குட்டி தீம் மியூசிக் அளித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் வெற்றிக்கு இசையும் ஒரு முக்கிய அங்கம் வகித்தது.  7ஜி ரெயின்போ காலனி படம் யுவன் இசை பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.  துணை நடிகர்கள் அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திருப்பர்.

இத்திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றதுபோல் தெலுங்கில் 7G பிரிந்தாவன் காலனி என வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதேபோல், கன்னடம், வங்கம், ஓடியா மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் “மலால்” என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

7ஜி ரெயின்போ காலனி படம், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அனைவராலும் ரசிக்கப்படும் என்ற கருத்தில் இருந்து வேறுபடுவதில்லை.

 

Top