தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்!

no-eduction-in-politicion

தேர்தலில் போட்டியிடுபவர்களில் 106 பேர் எழுத படிக்கத்தெரியாதவர்கள்!

education-clipart-png.png

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவா்களில், 652 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் 106 பேர் எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்றும் ‘ஜனநாயக சீர்திருத்த சங்கம்’ நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், பெ.ஜோசப் விக்டர் ராஜ், அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது;

write-pen

ஜனநாயக சீர்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் ஆகியவை தேர்தல் சீர்திருத்தம், ஜனநாயக மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகிறது. தற்போது, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் அளித்த பிரமாண வாக்குமூலங்கள் அடிப்படையில் அவர்களில் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், எத்தனை பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் என்பது குறித்த விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

politician-clipart
 

நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் ஆய்வுகள் முடிவடையாததால், அதை தவிர்த்து மற்ற கட்சிகளின் ஆய்வுகளை வெளியிட்டுள்ளோம். அதன்படி, தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 3 ஆயிரத்து  998 வேட்பாளர்களில் 3 ஆயிரத்து 559 வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 466 வேட்பாளர்கள் (13%) மீது குற்ற வழக்குகள் உள்ளன. திமுகவில் 136 வேட்பாளர்கள் (76%) மீதும், அதிமுகவில் 46 வேட்பாளர்கள் (24%) மீதும், காங்கிரஸ் கட்சியில் 15 பேர் மீதும் (71%), பாஜகவில் 15 பேர் மீதும் (75%) பாமகவில் 10 பேர் மீதும் (44%), தேமுதிகவில் 18 பேர் மீதும் (30%) குற்ற வழக்குகள் உள்ளன.

crime-pics.

திமுகவில் 50 பேர் மீதும், அதிமுகவில் 18 பேர் மீதும், பாஜகவில் 8 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில்  6 பேர் மீதும், தேமுதிகவில் 8 பேர் மீதும், பாமகவில்  5 பேர் மீதும் கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள் ஆவர். இதில், அதிமுகவில் 164 பேரும், திமுகவில் 155 பேரும், காங்கிரஸ் கட்சியில் 19 பேரும், பாஜகவில் 15 பேரும், தேமுதிகவில் 19 பேரும், பாமகவில் 14 பேரும் அடங்குவர்.

politician-pics

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் மேல் சொத்து உள்ளது. அதிக சொத்து உள்ள வேட்பாளர்களில், அம்பை  தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா (ரூ 246 கோடி) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில், சென்னை அண்ணாநகர் திமுக வேட்பாளர் எம்.கே.மோகனும் (ரூ211 கோடி), மூன்றாவது இடத்தில், கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மையம் வேட்பாளர் ஆர். மகேந்திரனும் (ரூ 161 கோடி) உள்ளனா்.

இசக்கி சுப்பையா
இசக்கி சுப்பையா

அதிக ஆண்டு வருமானம் உள்ள வேட்பாளர்களில், விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் (ரூ10.43 கோடி) முதலிடத்தில் உள்ளார். 23 வேட்பாளர்கள், தங்களுக்கு சொத்து எதுவும் இல்லை என தெரிவித்துள்ளனர். வேட்பாளர்களில், ஆயிரத்து 731 பேர் ஐந்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள்.

சி.விஜயபாஸ்கர்
சி.விஜயபாஸ்கர்

61 போ் எழுதப்படிக்க மட்டுமே தெரிந்தவர்கள். 106 பேர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். மேலும் வேட்பாளர்களை  குறித்த முழு விவரங்கள் www.adrindia.org என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 

மேலும் படிக்க: 

 இப்போ வீதி வீதியாக வரும் வேட்பாளர்கள்|ஜெயித்த பின்?

சென்னையில் 577 வாக்குச்சாவடி பதற்றமானவை!

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top