1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்:

corona-cover-photo

 1.15 லட்சம் இந்தியாவில் கொரோனா|அச்சத்தில் மக்கள்:

Coronavirus

இந்தியாவில் இரு மாதங்களாக கொரோனா வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. 1.15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறந்ததே இதற்கு காரணமாக இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

tamilnadu-school-open

மேலும், தேர்தல் நேரத்தில் பிரச்சார இடங்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியதால் மே முதல் ஜூலை வரை கொரோனா பரவக்கூடும் என கனி க்கப்பட்டுள்ளது.

பிரச்சாரம்-2

கொரோனா தடுப்பூசியை இன்னும் பலரும் செழுத்திக்கொள்ள முன்வரவில்லை. தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கும் கொரோனா வருகிறது. அதே சமயத்தில், கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அவர்களுக்கு மிக எளிதாக குணப்படுத்திவிட முடியும் என்கிறது சுகாதாரத்துறை.

vaccination

இந்நிலையில், கொரோனா பரவல் குறித்து தமிழ்நாடு உட்பட பல மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று மாலை வீடியோ மூலமாக பேச இருக்கிறார். இதனால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய பரவலுக்கு, மக்களுக்கும் ஒரு காரணம்தான். பல நபர்களின் முகத்தில் மாஸ்க் அணியாமல் செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. அரசு விதித்த விதிமுறைகளை மக்கள் சரிவர பின்பற்றுவதில்லை.

இனியாவது மக்கள் என்னசெய்ய வேண்டும்:

1.) கொரோனா பரவல் ஒரு பக்கம் இருந்தாலும் வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், கூடுமான வரைக்கும் மக்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லது.

2.) வீட்டை விட்டு வெளியே எங்கு சென்றாலும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்.

mask-pepole

3.) பையில் எப்போதும் சானிடைசர் வைத்துக்கொண்டு, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்வது நல்லது.

4.) கண், மூக்கு, வாய் ஆகிய பகுதிக்கு கைகளை பயன்ப்படுத்தும் முன் கைகளை சுத்தம் செய்யவேண்டும்.

5.) காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.

சானிடைசர்

6.) பள்ளிகளை விடுமுறை விட்டது மாணவர்கள் வீட்டில் இருக்கவே தவிர, வெளியில் சுற்றி திறிவதற்கல்ல. ஆகையால், மாணவர்களை வீட்டில் இருக்க பெற்றோர்கள் அறிவுறுத்துங்கள்.

7.) சமூக இடைவெளியை கடைபிடியுங்கள்.

bjp-11

8.) அனைவரும் கொரோனா தடுப்பூசியை செழுத்துக்கொள்ளுங்கள். 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் செழுத்திக்கொள்ள வேண்டும்.

9.) அரசு, அதிகாரிகள், சுகாதாரத்துறை போன்றோர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

10.) நோய் எதிப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள, சத்தான பழ,காய் வகைகளை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

summer_fruits

இவை எல்லாத்துக்கும் மேல், நாம் நம்பிக்கையுடன் கொரோனாவை விரட்ட போராட வேண்டும். அதே சமயத்தில், அஜாக்கிரதையாகவும் இருந்து விட கூடாது. இம்முறை கொரோனாவில் இருந்து நாம் முழுமையாக விடுபட வேண்டும். விடுப்படுவோம்.!.!

 

மேலும் படிக்க: 

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-1

சென்னை தொகுதியில் ஜெயிக்கப்போவது யாரு?|பகுதி-2

Follow us on :

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top