Main Menu

What’s New?

Connect With Us

விநாயகர் சிலைக்கு தமிழக அரசு தடை! “டாஸ் மாக்” திறக்கலாம்,விழா நடத்த கூடாதா? இந்து அமைப்பு கொந்தளிப்பு

Read Carefully

SHARES

இன்னும் 9 நாட்களே விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருக்கும் நிலையில்,தெருக்களில் பிரமாண்டமாக விநாயகர் சிலைகளை அமைக்க கூடாது என்றும்,சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாடுங்கள் என்றும்,ஊர்வலமும் கிடையாது என்றும்,விநாயகர் சிலைக்கு தடை விதித்துள்ளது தமிழக அரசு.தமிழகத்தில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம்.வீடுகளில் மட்டுமல்லாது,சாலையோரப் பகுதிகளிலும் களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை பிரம்மாண்டமாக அமைத்து,தினசரி வழிபாடுகளை நடத்தி,விழா முடிந்த பின் நீர்நிலைகளில் கரைப்பார்கள்.

இந்த ஆண்டில் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.இந்து முன்னணி அமைப்பு சார்பில்,தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகளை நடத்த திட்டமிட்டிருந்தனர்.இப்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால்,விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்து இந்து முன்னணி உள்பட 17 இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலர் சண்முகம் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.அப்போது,”பாரம்பரிய”விழாவான விநாயகர் சதுர்த்தி விழாவை நிறுத்தாமல்,உரிய பாதுகாப்புடன் நடக்கவும்,5 நபர்களுக்கு மேல் கூடாமல்,மாஸ்க் அணிந்தும்,சமூக இடைவெளியை கடைப்பிடித்தும்,விழாவை நடத்த அனுமதிக்குமாறு இந்து அமைப்பினர் கேட்டுக்கொண்டனர்.”இதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என தலைமைச் செயலர் கூறினார்.ஆனால் திடீர் என தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடைவிதித்துள்ளது.

கொரோனா காரணமாக “டாஸ் மாக்” கடைகளை மூட உயர்நீதி மன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வாதாடி திறந்து, இன்று இதனால் கொரோனா பரவுகின்றதே?அது அரசுக்கு தெரியாத?ஆகையால்,ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது உறுதி என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.மேலும் இன்று காலை பா.ஜா.க தமிழக தலைவர் முருகன் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில்,தடைகளை நீங்க விநாயகரை வேண்டுவோம் விநாயகருகே தடையா?மனதிற்கு வேதனையாக உள்ளது.ஆகையால் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதே போல் விநாயகர் சிலை செய்து விற்கப்படும் விற்பனையாளர்கள் பலரின் வாழ்வாதாரம் பாதிப்பு அடைகிறது,ஆகையால் அவர்களுக்கு உதவித்தொகையும்,வழங்க வேண்டும்.

Top