Main Menu

What’s New?

Connect With Us

லேடி சூப்பர் ஸ்டார் “NAYANTHARA” : 36 வது பிறந்தநாள் : VIGNESH SHIVAN.

NAYANTHARA BIRTHDAY
Read Carefully

SHARES

லேடி சூப்பர் ஸ்டார் “NAYANTHARA” : 36 வது பிறந்தநாள். லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் “நயன்தாரா” -வின் பிறந்தநாள் இன்று. நயன்தாரா 1984 -ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் “டயானா மரியம் குரியன்”.  தனது கல்லூரி காலங்களிலேயே ஒரு மலையாள சேனலில் தொகுப்பாளராக பணிபுரிந்தார். 

2003 -ஆம் ஆண்டு தனது முதல் படமான “மனசினக்கரே” வில் நடிகர் ஜெயராமிற்கு ஜோடியாக நடித்தார். பிறகு மலையாளத்தில் 2 படங்களில் நடித்தார். அதன்பிறகு, 2005 -ல் “ஐயா” படம் மூலமாக அறிமுகமானார். அதற்க்கு அடுத்த படமே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக “சந்திரமுகி” படத்தில் நடித்தார்.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு செண்டிமெண்ட் உள்ளது. ரஜினியுடன் நடித்தால் அந்த நடிகர், நடிகைகளுக்கு பெரும்பாலும் நல்ல வாய்ப்புகள் கிட்டும். அதன் காரணமாகவோ என்னவோ நயன்தாராவிற்கு அதன்பிறகு ஏறுமுகம்தான்.

அதன்பிறகு, தெலுங்கிலும் 2006 -ஆம் ஆண்டு “லட்சுமி” படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கொடிகட்டி பறந்து வருகிறார். கடந்த 15 வருடங்களாக தனது முத்திரையை ஆணித்தரமாக பதித்து வைத்திருக்கிறார். 

குறிப்பாக தமிழில், யாரடி நீ மோஹினி, வல்லவன், ஆதவன், ராஜா ராணி, தனி ஒருவன், அறம் போன்ற படங்கள் அவருக்கு மைல்கல்லாக அமைந்தது. இடையில் சில சறுக்கல்களையும், கிசுகிசுக்களையும் சந்தித்தாலும் ராஜா ராணி படத்தின் மூலம் ரி – என்ட்ரி கொடுத்தார். நயன்தாராவிற்கு என்று ஒரு தனி ரசிகர்ப்பாட்டலாமே இருக்கின்றது. ஒரு காலத்தில், நடிகை குஷ்பூவுக்கு அவரின் ரசிகர்கள் கோவில் கட்டினர்.  அதன் பிறகு நடிகை நயன்தாராவிற்கு கோவில் கட்டி அவரின் ரசிகர்கள் கொண்டாடினர். நயன்தாராவிற்கு ரசிகர்களிடையே அவ்வளவு வரவேற்பு கிடைத்தது. அவருடன் நடிக்க வந்த திரிஷா போன்ற நடிகைகளையெல்லாம் பின்னுக்கு தள்ளி 15 வருடமாக கொடிகட்டி பறக்கும் நயன்தாராவிற்கு இன்று (18.11.2020) 36 வது பிறந்தநாள்.

சமீப காலமாக பெண்களை மையப்படுத்திய கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கிறார் NAYANTHARA. குறிப்பாக, அறம், இமைக்கா நொடிகள், டோரா, தற்போது டீஸர் வெளியாகியிருக்கும் “நெற்றிக்கண்” படங்கள். இதில், குறிப்பாக “அறம்” படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளையும் பெற்றார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படங்களில் அவருக்காக படமா பார்க்க வரும் ரசிகர்கள் அதிகம், அதேபோல் அவரால் படம் வெற்றியும் பெட்டற்றதுண்டு. அதேபோல், நயன்தாராவும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார். அதனால் தான் இவரை “லேடி சூப்பர்ஸ்டார்” என்று அழைக்கின்றனர்.

கைவசம் தற்போது அரை டஜன் படங்களை வைத்துள்ளார் நயன்தாரா. அவரின் அடுத்தடுத்த படங்களும், முயற்சியும் வெற்றிபெற வாழ்த்துவோம்….

Also Read : SURIYA | கவுதம் மேனன் இணையும் புதிய WEB SERIES : இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்.

Follow us on Facebook and Instagram:

CHENNAIYIL FACEBOOK

CHENNAIYIL INSTAGRAM

Top