BIGBOSS லாஸ்லியா தந்தை காலமானார் : அதிர்ச்சி தகவல். 

BIGBOSS லாஸ்லியா தந்தை காலமானார் : அதிர்ச்சி தகவல்.  பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதனை உலகநாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் நான்காவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. 

கடந்த ஆண்டு BIGBOSS  சீசன் -3 ஒளிபரப்பானது. இதில், இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா என்பவர் பங்குபெற்றார். இளம் பெண்ணான லாஸ்லியா அந்த சீசன் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் இளைஞர்களை கவர்ந்திழுத்தார்.  அந்த நிகழ்ச்சியின் மூலம், இவருக்கு பல ரசிகர்களும் உருவாகினர். அதே நிகழ்ச்சியில், சின்னத்திரை நடிகர் கவினும் பங்குபெற்றார். இவர்கள் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. இந்த செய்தி பற்றி பல செய்திகளும் வலம் வந்தன. 

BIGBOSS சீசன் 3 ன் போது, லாஸ்லியாவின் தந்தை மற்றும் தாய் வீட்டிற்குள் வந்து அவருக்கு அறிவுரை வழங்கினர். அதன் பின்பு, பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் கவினுடன் லாஸ்லியா பற்றிய செய்திகள் குறைய ஆரம்பித்தன. இதன் மூலம் LOSLIYA மிகப்பெரும் பிரபலமானார். தற்போது, “பிரண்ட்ஷிப்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல், நடிகர் ஆர்யாவுடன் ஒரு படத்திலும் ஒரு புதிய நடிகரின் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். 

தற்போது, LOSLIYA -வின் தந்தை மரிய நேசன் அவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை அளித்துள்ளது. கனடாவின், இருந்த அவர் நேற்று திடீரென உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தற்போது லாஸ்லியா தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார். 

இதற்கு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பலர்  LOSLIYA  -விற்கு ஆறுதல் கூறி வருகின்றனர். 

Also Read : பாஜகவில் நானா?|நடிகர் சந்தானம் விளக்கம்!

Follow us on Facebook and Instagram:

CHENNAIYIL FACEBOOK

CHENNAIYIL INSTAGRAM

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top