சீமானிடம் ரஜினி பேசியது என்ன?

seemaaannnnn

இயக்குனர்கள் மணிவண்ணன்,பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய,சீமான்.நடிகர் பிரபு,மதுபாலாவை வைத்து “பாஞ்சாலங்குறிச்சி” என்கின்ற திரைப்படத்தை இயக்கி,இயக்குனரானார் சீமான்.அதன் பின்னர் சில படங்களை இயக்கிய சீமான்.சி.பா.ஆதித்தனார் நிறுவிய “நாம் தமிழர் கட்சியை” தலைமையேற்று நடத்தி வருகிறார்.இந்நிலையில் அடிக்கடி ரஜினிக்கும்,சீமானுக்கும் பிரச்சனைகள் ஏற்பட தொடங்கின.காரணம்,“தமிழன் தான் தமிழ் நாட்டை” ஆழ வேண்டும் என்பதில் சீமான் கடைபிடிக்கும் கொள்கையில் ஒன்று.இதனால் சீமானின் ஆதரவாளர்களுக்கும்,ரஜினியின் ரசிகர்களுக்கும் அடிக்கடி சண்டைகளும் ஏற்ப்பட்டு வந்தன.

rajini8_2019

சில மாதங்களுக்கு மும்பு,ரஜினியின் தோற்றத்தை வைத்தோ,அல்லது ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையை வைத்தோ யாரும் கேலி செய்யக்கூடாது,என சீமான் தன் கட்சியாளர்களுக்கு கட்டளையிட்டார்.தற்போது ரஜினியுடனான முரண்பாடுகள் நீங்கிவிட்டதாக சீமான் கூறியுள்ளார்.இதன் காரணம் என்னவென்று பலருக்கும் புரியாத புதிராக இருந்தது.அதன் ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.ரஜினியிடம் இருந்து வந்த செல்போன் அழைப்பு தான் காரணமாம்.ஆம்!…அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக ரஜினி அறிவித்த அடுத்த நிமிடமே அதற்கு எதிராக பேட்டி அளித்தார் சீமான்.அப்போது முதல் ரஜினியை அவர் கிண்டல் செய்யாத,விமர்சிக்காத,வசைபடாத மேடைகளே இல்லை எனலாம்.

இதற்கு காரணம்,“கன்னடரான ரஜினி தமிழகத்தை ஆள நினைப்பதா? என்பது மட்டுமே சீமானின் கருத்தாக இருந்தது.திடீரென ரஜினியுடனான தங்களின் முரண்பாடுகள் நீங்கிவிட்டதாக சீமான் கடந்த வாரம் பேட்டி அளித்தார்.அதில்,ரஜினி அமைதி,நிம்மதியை எதிர்பார்ப்பவர்,அவர் அரசியலுக்கு வந்தால் எங்களை போன்று பல்வேறு அவமானங்களை அவர் சந்திக்க நேரிடும்.ரஜினியின் மனதுக்கு அவரால் இந்த துரோகங்களை எல்லாம் எதிர்கொள்ள முடியாது.எனவே ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதுதான் நல்லது என்று அறிவுரை வழங்கினார்.திடீரென ரஜினி மீது அக்கறைப்பட என்ன காரணம் என விசாரித்த போது,கிடைத்த தகவல்…

சீமானை தொலைபேசியில் தொடர்ப்பு கொண்டு ரஜினி பேசியதுதான் என்கின்றார்கள்.சீமான்,கடந்த வாரம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அப்போது நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு சீமான் உடல் நிலை குறித்து விசாரித்ததாக சொல்கிறார்கள்.மேலும் சீமானின் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும்.என்று வாஞ்சையாக ரஜினி அறிவுரை வழங்கியதாகவும்,அதோடு மட்டும் அல்லாமல் அரசியல் நிலவரம் குறித்தும்,சீமான் கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும் ரஜினி சீமானிடம் விவாதித்ததாக கூறுகிறார்கள் இதனை தொடர்ந்துதான் ரஜினி மீதான தன் வன்மத்தை சீமான் உடனடியாக கைவிட்டதாக கூறுகிறார்கள்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top