Main Menu

What’s New?

Connect With Us

அமெரிக்காவை தாக்கும் இன்னொரு நோய்!…அச்சத்தில் மக்கள்!

Read Carefully

SHARES

 

இந்தாண்டு தொடக்கத்தில் சீனாவில் தொடங்கிய கொரோனா மெல்ல மெல்ல உலக முழுவதிலும் பரவியது.இதில் அதிகளவில் பாதித்தது இத்தாலி.அதன் பின்னர் “அமெரிக்க”தான்.தற்போது அமெரிக்க முதல் இடத்தில் உள்ளது.74 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.பொருளாதார ரீதியிலும் கடும் பாதிப்பினை சந்தித்து வருகிறது.அமெரிக்காவின் எதிர் காலமே இளைஞர்கள்தான்,ஆனால் கொரோனாவால் அமெரிக்காவில் பல இளைஞர்கள் மரணித்துள்ளனர்.இன்று அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்,அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப்,ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்னும் இதற்கு எந்த நாடும் முழுமையாக தடுப்பு ஊசியை கண்டு பிடித்தபாடில்லை.

 

இந்நிலையில் அமெரிக்காவை இன்னொரு நோய் தாக்கியுள்ளது.மனித மூளையை கடும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் “அமீபா”.டெக்சாஸ் மாகாணத்தில் 6 வயது சிறுவன் மூளையை உண்ணும் அமீபா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். பொதுவாக வெதுவெதுப்பான, தூய நீரில்தான் இந்த அமீபா காணப்படும்.இது உடலுக்கு நுழைந்தால், ஒற்றை தலைவலி, ஹைபர்தர்மியா, கழுத்து வலி, வாந்தி, தலைச்சுற்றல், சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும்.உயிரிழந்த சிறுவனின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள குழாயில் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் நகரத்தின் பிற பகுதிகளிலும் இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குழாய் நீரை பயன்படுத்த வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொதிக்க வைத்த நீரை மட்டுமே குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. இந்நிலையில் அப்பகுதிக்கு பேரிடர் அறிவிப்பை ஆளுநர் வெளியிட்டுள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் 1983- 2010ம் ஆண்டு வரை அமீபா பாதிப்பால் 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமீபாவால் அமெரிக்கர்களுக்கு மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் தற்போது உருவெடுத்துள்ளது.

Top