Main Menu

What’s New?

Connect With Us

VIJAY SETHUPATHI நடிக்கும் “800” : முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு.

800MM
Read Carefully

SHARES

VIJAY SETHUPATHI  , இலங்கை கிரிக்கெட் அணியின்  முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கிறார். அதில் நடிகர் விஜய்சேதுபதி,  முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். 
 
 
VJMM
 
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சின் ஜாம்பவானாக விளங்கியவர் முத்தையா முரளிதரன்.  இவர் இலங்கையில் உள்ள கண்டியில் 1972 -ஆம் ஆண்டு பிறந்தார்.  தற்போது இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக விளங்குகிறார். அதுமட்டுமின்றி IPL -ல் சன் ரைசர்ஸ் ஹைதெராபாத் அணியின் பயிற்சியாளராகவும்  விளங்குகிறார். 
 
இவர் தான் டெஸ்ட் போட்டிகளில் முதன்முறையாக ‘800’ விக்கெட்களை வீழ்த்திய வீரர். இவரின் சாதனைகள் எக்கச்சக்கம். அதேபோல், இவர் மேல் ஏற்பட்ட விமர்சனங்களும் அதிகம். இவரின் பந்துவீச்சு எரிவது போன்று உள்ளது என விமர்சனங்கள் எழுதன. இவர் பந்துவீச்சின் மேல் பலமுறை முறியீடு  செய்திருக்கிறார்கள்.   
 
தற்போது, இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது. இதில் VIJAY SETHUPATHI ,  முத்தையா முரளிதரனாக நடிக்கிறார். இப்படத்திற்கு ‘800’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை “கனிமொழி” படத்தின் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி  இயக்குகிறார்.   
 
சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தார் பிக்ச்சர்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து நடிகர் ராணா தகுபதி தயாரிக்கிறார். இப்படத்தை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ், இசையமைக்கிறார். 
 
படத்தின் FIRST LOOK போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த வருடம் ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
800
 
இதற்கு, முத்தையா முரளிதரன்,  தனது வாழ்க்கை வரலாற்று படத்தில்  விஜய் சேதுபதி நடிப்பதை பெருமையாக கருதுவதாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் தான் ஒரு அங்கமாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன் என்றும், படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என விஜய்சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
 
எதிர்ப்புகள் எழும்பியுள்ளன :
 
விஜய்சேதுபதி நடிக்கும் இப்படத்திற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. பல அரசியல் கட்சிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்கள் பலர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 
 
இலங்கை பிரதமர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக செயல்பட்ட  முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது எனவும் கூறிவருகின்றனர். 
 
பெரியார் திராவிட கழகம் கட்சியின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இவ்வாறு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துவரும் நிலையில், விஜய்சேதுபதியை கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குனர் “சீனு ராமசாமி” எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
தனது ட்விட்டர்  பக்கத்தில் “விஜய்சேதுபதியின் இதயம் உலகத்தமிழர்கள். அவர் நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படம் ஒரு சான்று. ஈழத்தமிழர் உள்ளத்திற்கு அருமருந்து.  உள்ளங்கைக்கு முத்தம். மக்கள் செல்வா.. நீரே எங்கள் தமிழ் சொத்து ஐயா, நமக்கெதற்கு மாத்தையா? மாற்றய்யா? என பதிவிட்டுள்ளார். 
 
இதனை ஒரு அறிவுரை போன்று விஜய்சேதுபதியிடம் கூறியுள்ளார் சீனு ராமசாமி.    இதற்கு, சேதுபதி என்ன பதில் சொல்ல போகிறார் என்றும், படத்தில் நடிப்பதாக இருந்த முடிவை மாற்றிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
 
 
 
Top