Main Menu

What’s New?

Connect With Us

மீண்டும் வெற்றி பாதையில் சென்னை சூப்பர் கிங்ஸ் : வாட்சன், டுப்லெஸிஸ் அதிரடி.

KXIP vs CSK
Read Carefully

SHARES

மீண்டும் வெற்றி பாதையில் சென்னை சூப்பர் கிங்ஸ் :
பஞ்சாப் அணியுடனான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தாண்டு ஐ.பி.எல்., போட்டியில்  தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை அணி.
 
 ஐ.பி.எல்., தொடரின் 13 -வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.
துபாயில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கிங்ஸ் XI பஞ்சாப் அணியும் மோதின.
 
டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய கே.எல்.ராகுல் (63), பூரான் (33), மயன்க் அகர்வால் (26), மந்தீப் (27),  அணியின் ரன்களுக்கு கைகொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
 

வாட்சன், டுப்லெஸிஸ் அதிரடி :

cks vs punjab kxip 2020
 
 
179 என்ற இலக்குடன் களமிறங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. தொடக்க ஆட்டக்காரர்களாகிய வாட்சன் (83*),  டுப்லெஸிஸ் (87*), இருவரும் அரைசதத்தை கடந்தனர்.  விக்கெட்கள் எதுவும் கொடுக்காமல் 17.4 ஓவர்களிலேயே 181 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 
 
இந்தாண்டு ஐ.பி.எல்., தொடரில், தனது 2 -வது வெற்றியை பதிவுசெய்து மீண்டும் வெற்றி பாதைக்கு சென்றது சென்னை அணி. 
 
ஐ.பி.எல்., 2020 – புள்ளிப்பட்டியல் :
 
ஐ.பி.எல்., 2020 -ஆம் ஆண்டின் இதுவரையான புள்ளி பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில்,  இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் 6-வது இடத்தில உள்ளது. 
 
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றிபெற்று  6 புள்ளிகளுடன் முதல் இடத்தில உள்ளது.
தொடர்ச்சியாக, இந்தாண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளில் வென்று, 6 புள்ளிகளுடன் 2- வது இடத்தில் உள்ளது.
 
விராட் கோஹ்லியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, நான்கு போட்டிகளில் விளையாடி, மூன்றில் வென்று,  ஆறு புள்ளிகளுடன், 3-வது இடத்தில உள்ளது. 
 
கொல்கத்தா அணி நான்கு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இரண்டில் வென்று நான்கு புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில், இரண்டில் வென்று நான்கு புள்ளிகளுடன் 5-வது இடத்தில உள்ளது.
 
சன் ரைசர்ஸ் ஹைத்ராபாத், இதுவரை இரண்டு போட்டிகளில் வென்று நான்கு புள்ளிகளுடன் 7-வது இடத்தில உள்ளது.   அதை தொடர்ந்து, நேற்றைய ஆட்டத்தின் தோல்வியால் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது கிங்ஸ் XI பஞ்சாப் அணி. இதுவரை பஞ்சாப் அணி 1 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது.
 
சென்னை அணியின் முன்னேற்றம் :
 
cks vs kxip 2020
 
 
சென்னை அணி, நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 6 -வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதற்கு முன்னர் வரை சென்னை அணி கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிலே- ஆப் (PLAY – OFF) சுற்றுக்கு முன்னேற முடியும். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது. சென்னை அணியின் நேற்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட்டையும் இழக்காமல் அதிரடியாக விளையாடியது, ரசிகர்ககுக்கு மகிழ்ச்சியளிக்க கூடியதாக அமைந்தது.
 
இன்றைய ஆட்டம் :
 
இன்றைய ஆட்டத்தில், விராட் கோஹ்லியின் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோத இருக்கின்றன. 
 
 
Top