பொங்கல் விருந்தாக “மாஸ்டர்” : இதுவரை பொங்கலன்று வெளியான விஜய் படங்கள்.
விஜய். இந்த பெயருக்கு பின்னால் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் மகன் விஜய். தந்தையின் மூலம் சினிமா துறைக்குள் வந்தாலும் அவருக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்குவதற்கு அவர் பட்ட கஷ்டங்களும், அவமானங்களும் அதிகம். முதல் படமான “நாளைய தீர்ப்பு” படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விஜய் பல கேலி, கிண்டல்களுக்கு உள்ளானார். தொடர்ந்து அவருக்கென தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு அவர் செய்த மெனக்கெடல் அதிகம். பூவே உனக்காக படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜய்.
அதன்பிறகு, “காதலுக்கு மரியாதை” படத்தின் மூலம் பல ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர்ந்திழுத்தார். தொடர்ந்து,”காலமெல்லாம் காத்திருப்பேன்”, “நேருக்கு நேர்”, “வசீகரா” போன்ற காதல், ரொமான்ஸ் படங்களில் நடித்தார். திருமலை படத்தின் மூலம் முழு நீல ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் ஆக்ஷன் ஹீரோ என்ற அந்தஸ்தை பெற்றார் விஜய். அதன்பிறகு, தமிழ் சினிமாவில் அவருக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்தார். அதற்கு, “கில்லி” படம் அஸ்திவாரமாக அமைந்தது. ஆனால், ஒன்று மட்டும் மாறாமல் விஜய் படங்களில் அமைந்தது. அது, பொங்கல், தீபாவளி போன்ற விழா நாட்களில் தனது படங்களை வெளியிடுவது.
தனக்கென ஒரு ரசிகர் பட்டாளம் மற்றும் திரைப்பட விற்பனையில் மிகப்பெரிய சாதனை படைத்தவர் தளபதி விஜய். அவர் திரைப்பயணத்தில் இதுவரை பொங்கல் தினத்தன்று வெளியான படங்களின் பட்டியலை பார்ப்போம். பொதுவாக பொங்கல் தினத்தன்று வெளியாகும் படங்கள் குடும்ப படங்களாகவே இருக்கும். பொங்கல் விழாவின் போது குடும்பங்கள், குழந்தைகள் வெகுவாக திரையரங்கு சென்று ரசிக்கும் படமாக அமையும். அதுவே, விஜய் படங்கள் என்றால் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பொங்கல் விருந்தாகவே அமையும்.
தளபதி விஜய் இதுவரை 64 படங்களில் நடித்துள்ளார். அவற்றில், பொங்கலன்று வெளியான படங்களின் எண்ணிக்கை 13. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற விழா காலங்களை இலக்காக வைத்துதான் எடுக்கப்படுகின்றன. தற்போதுகூட, “தளபதி 65” படம் 2021 தீபாவளியை எதிர்நோக்கி எடுக்கப்படுகிறது.
பொங்கல் தினங்களின் வெளியான விஜயின் படங்களும் அவற்றின் வரவேற்பும் :
1.) கோயம்புத்தூர் மாப்பிள்ளை – 1996 – Flop
2.) காலமெல்லாம் காத்திருப்பேன் – 1997 – Flop
3.) கண்ணுக்குள் நிலவு – 2000 – Average
4.) பிரண்ட்ஸ் (Friends) – 2001 – Hit
5.) வசீகரா – 2003 – Hit
6.) திருப்பாச்சி – 2005 – Super Hit
7.) ஆதி – 2006 – Flop
8.) போக்கிரி – 2007 – Blockbuster
9.) வில்லு – 2009 – Flop
10.) காவலன் – 2011 – Average
11.) நண்பன் – 2012 – Hit
12.) ஜில்லா – 2014 – Average
13.) பைரவா – 2017 – Hit
14.) மாஸ்டர் – 2021 – Loading…
ஆரம்ப காலத்தில் பொங்கலுக்கு வெளியான படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், சமீப காலத்தில் விஜயின் படங்கள் Block Buster ஆகின.
மேற்குறிப்பிட்ட பட்டியலில், சில படங்கள் பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்தன. குறிப்பாக, 2007 ஆம் ஆண்டு வெளியான “போக்கிரி” படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆண்டுகள் செல்ல செல்ல விஜயின் மவுசு கூடிக்கொண்டே போகிறது. அந்தவகையில் இந்தாண்டு பொங்கல் சிறப்பாக “மாஸ்டர்” படம் வெளியாகியிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பும்,எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அடுத்ததாக “தளபதி 65” படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
இதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் தினங்களில் விஜயின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவேண்டும், மகிழ்ச்சியை தரவேண்டும் என Chennaiyil.com சார்பாக வாழ்த்துகிறோம்.
இதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் தினங்களில் விஜயின் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெறவேண்டும், மகிழ்ச்சியை தரவேண்டும் என Chennaiyil.com சார்பாக வாழ்த்துகிறோம்.
Also Read: கமலின் “விருமாண்டி” 17 ஆண்டுகள் நிறைவு : பொங்கல் அன்று OTT ரிலீஸ்.
Follow us on Facebook and Instagram: