“மாஸ்க்” இலவசம் எனக்கூறி ஏமாத்தும் கும்பல்! மக்களே உஷார்!!

கொரோனா வருவதற்க்கு முன்பு வரை“மாஸ்க்” என்பது மருத்துவத்துறையை சேர்ந்தவா்கள் தான் பயன்ப்படுத்தி வந்தாா்கள்,சில தொழில்ச்சாலைகளில் மாசில் இருந்து தப்பிப்பதற்காக தொழிளாலா்கள் மாஸ்க்கை போட்டுக்கொள்வாா்கள்.தமிழகத்தை பொருத்தவரை துப்புரவு தொழிலாளா்கள் கூட மாஸ்க்கோ அல்லது கிளொசோ அனிந்து நாம் பாா்த்ததில்லை.சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.ஆனால் இதனை அப்போது இந்தியா உட்பட பல நாடுகள்,இது சீனாவின் வைரஸ் நம் நாட்டிற்க்கு பரவாது என்கின்ற எண்ணத்தில் இருந்தனா்.ஆனால் பிப்ரவரி முதல் பிற நாடுகளுக்கும் பரவ,இந்தியாவிற்கு மாா்ச் மாதம் முதல் கொரோனா பரவ ஆரம்பித்தது.தற்போது கொரோனா உலக முழுவதிலும் விஸ்வரூபம் எடுத்து வருவதை நாடறியும்.

கொரோனாவிற்கு மருந்துகள் இல்லை, தற்போது தான் கண்டுபிடித்து வருகின்றனா்.சில நாடுகள் மருந்தினை கண்டுப்பிடித்து சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றனா்.இது வெற்றி பெற்று மனிதர்களிடம் கிடைக்க சில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது.இதனால் கொரோனாவில் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்ள சமூக இடைவெளி,மாஸ்க் அணிந்துக்கொள்ளுதல்,வெளியில் எங்காவது சென்று வந்தால் கைகளையும்,கால்களையும்,நன்கு சுத்தம் செய்துக்கொள்ளுதல்,சுத்தம் செய்த பின்னா் சாணிடைசா் மூலம் மீண்டும் கைகளை சுத்தம் செய்துக்கொள்ளுதல் என தனிமனித ஒழுக்கத்தையே மருத்துவர்கள் கூறிவருகின்றனா்.தனி மனித இடைவெளி,அதாவது சமூக விலகலை மக்கள் ஒழுங்காக பின்பற்றவில்லை என்பது உண்மைதான்.ஆனால் வெளியில் அனைத்தும் இயங்கும் போது சமூக இடைவெளி என்பது சாத்தியமில்லை…

உதாரணத்திற்க்கு:

ஊடகம்,வணிகம்,பழ,காய்கறிக்கடைகள் என இங்குலாம் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது என்பதே நிதா்சனமான உண்மை!ஆகையால் சமூக இடைவெளியிலும் சிக்கல்கள் உள்ளன.அதே போல் சாணிடைசா் பயண் படுத்துவதிலும் மருத்துவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாதிரி கருத்துக்களை கூறிவருகின்றனா்.சாணிடைசா்களை பயண்படுத்த தேவையில் சோப்பினாலே நன்கு சுத்தம் செய்தால் போதுமானது என்று சுகாதாரத்துறை கூறுகிறது.சாணிடைசா்களை பயண்படுத்துவதால் கூடுதல் சுத்தமாகும் ஆகையால் சாணிடைசா்களை பயண்படுத்துங்கள் என மருத்துவர்கள் கூறுகிறாா்கள்.மேலும் சாணிடைசா்களை பயண்படுத்துவதால் சிலருக்கு அளர்ஜிகளும் வருகிறது.இதனால் சாணிடைசா்களை மக்கள் பயண்படுத்தலாமா,வேண்டாமா என்கின்ற குழப்பம் நீடித்து வருகிறது.

அதே போல் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முதலில் மக்கள் சாதாரனமான சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்தாா்கள்.ஆனால் இதனை அணிவதால் எவ்வித பயண்களும் இல்லை எனவும் N95 என்கின்ற கொரோனாவுக்கான பிரத்தேகமாக தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்க்கை தான் அணிய வேண்டும். என மருத்துவ வட்டாரங்கள் கூறினாா்கள்.ஆனால் சாதாரண சர்ஜிக்கல் மாஸ்க்கை அணிந்தால் போதும் என சுகாதாரத்துறை கூறியுள்ளனா்.இதனால் சுகாதாரத்துறை Vs மருத்துவர்கள் இடையே குழுப்பங்கள் ஏற்ப்பட்டன.இக்குழப்பங்களுக்கு இன்று வரை விடை தெரியவில்லை.

மேலும் சில தர மற்ற மாஸ்க்குகளும்,விற்க்கப்பட்டு வருகிறது.சாக்கடை அருகையிலும்,குப்பைமேட்டின் அருகையிலும்,மாஸ்க் விற்க்கப்பட்டு வரும் அவல நிலையும் ஏற்ப்படுகிறது.இதனை மாநகராட்சியும்,மாவட்ட நிர்வாகமும்,நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது ஒருபுறமிருக்க,இப்போது புதிய பிரச்சனையாக மாஸ்க்கை வைத்து ஒரு கும்பல் மக்களை ஏமாத்தி வருகிறது.சென்னையில் பல பகுதிகளில் மாஸ்க் இலவசமாக வழங்குகிறோம் என்று வீடு வீடாக சென்று அந்த மாஸ்க்கின் மீது மயக்க மருந்தினை தடவி கொடுத்து சரியாக இருக்கிறதா?என்று தங்கள் கண்முன்னால் அணிய செய்ய சொல்லி அவர்கள் மயங்கியதும்,தங்கம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து செல்கிறாா்கள்.இதனால் மக்கள் உஷாராக இருக்க சென்னை போலீஸாா்,மற்றும் பிற மாவட்ட போலீஸாா் எச்சரித்துள்ளனா்.இத்தகைய செய்தியை எந்த ஊடகமும் கவனம் செலுத்தாதது வருத்தமே.யாரேனும் மாஸ்க்கினை இலவசமாக வழங்குகிறோம் என்று வந்தால் உஷாராக இருங்கள்….

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top