டொவினோ தாமஸ் மருத்துவமனையில் அனுமதி

tovinothomas pics

tovino-thomas

மலையாள திரை உலகில் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் தனுஷ் நடித்த “மாரி-2” திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகமானவர். தற்போது  டொவினோ தாமஸூக்கு படப்பிடிப்பின் போது வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மலையாளத்தில் சிறப்பான கதைகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்ததன்  மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர் டொவினோ தாமஸ். தமிழில் “மாரி-2” படத்தின் மூலம் தனுஷூக்கு வில்லனாக நடித்திருந்தார்.

Tovino-thomas

டொவினோ தாமஸ் தற்போது ‘கால’(Kala) என்ற படத்தில் நடித்து வருகிறார். வி.எஸ்.ரோஹித் இயக்கும் இந்தப் படத்தில் திவ்யா பிள்ளை, லால் உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.’கால’ படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கும் போது நடிகர் டொவினோ தாமஸூக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டதாகவும் அதனால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.டொவினோ தாமஸின் வயிற்றின் உட்பகுதியில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் அவர் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் அவர் நலம் பெற வேண்டும் என திரைத்துறையினரும்,அவரது ரசிகர்கள்  பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றன.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp

Also Read

Scroll to Top