மலையாள படம் “ஜல்லிக்கட்டு” : நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு தேர்வு | JALLIKATTU | OSCAR .
மலையாளம் படமான “JALLIKATTU” இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வாகியுள்ளது. சினிமா கலைஞர்களுக்கான உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் “ஆஸ்கார்” விருது ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகிறது. இந்த விருதானது அமெரிக்காவில் கடந்த 92 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
2020 -க்கான விருது வழங்கும் விழா அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ம் தேதி நடக்கிறது. அதற்கான திரைப்படங்களை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்களுக்கான விருதுகள் தரப்படும். அதனை வெல்வதற்கே அனைத்து நாட்டு திரைத்துறையும் போட்டிபோட்டுக்கொள்கின்றன. கடந்த ஆண்டு இந்தியா சார்பில் ரன்வீர் சிங் மற்றும் அலியா பட் நடித்த “கல்லி பாய்” படத்தை தேர்வு செய்து அனுப்பினார் தேர்வு குழுவினர். ஆனால் அப்படம் இறுதி சுற்று வரை செல்லவில்லை.
இந்த ஆண்டுக்கான படங்கள் பட்டியலில், கடந்த 2019 -ம் ஆண்டு வெளியான மலையாள படமான “ஜல்லிக்கட்டு” திரைப்படம் தேர்வாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு மலை கிராமத்தில் கசாப்பு கடைக்காக கொண்டுவரப்பட்ட எருமை மாடு ஒன்று தப்பித்து விடுகின்றது. அந்த மாட்டை பிடிப்பதற்கு அந்த கிராமமே போராடும் வெறியோடு துரத்துகிறது. இதனை ஒரு உணர்ச்சிகரமான கட்சி அமைப்போடு கொடுத்துள்ளார் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இப்படத்தில், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில், காட்சி அமைப்பு மற்றும் உணர்வு ரீதியான காட்சி உள்ளிட்டவையால் இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு படத்திற்கான போட்டியில் இப்படம் கலந்துள்ளது. இந்திய திரைப்பட கூட்டமைப்பு இதனை தேர்வுசெய்துள்ளது. இதன் தலைவர் ராகுல் ராவைஸ் கூறும்போது, சகுந்தலா தேவி, சப்பாக் செக்போஸ்ட், சிண்டு கா பர்த்டே போன்ற படங்களில் ஜல்லிக்கட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இப்படம், இறுதி சுற்று வரை செல்லவேண்டும், ஆஸ்கார் வெல்ல வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது. இறுதி முடிவுகள் வரும் வரை பொறுத்திருந்து காண்போம்.
Read Also : சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இயக்கும் “என்றாவது ஒரு நாள்” : விதார்த் | ரம்யா நம்பீசன்
Follow us on Facebook and Instagram: