Warning: Error while sending QUERY packet. PID=6162 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024

Warning: Error while sending QUERY packet. PID=6162 in /var/www/site/public/wp-includes/wp-db.php on line 2024
புதிய பாராளுமன்ற கட்டிடம் : டிசம்பர் 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் | உச்சநீதிமன்றம் அதிருப்தி.

Main Menu

What’s New?

Connect With Us

புதிய பாராளுமன்ற கட்டிடம் : டிசம்பர் 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் | உச்சநீதிமன்றம் அதிருப்தி.

new paliamnet building
Read Carefully

SHARES

புதிய பாராளுமன்ற கட்டிடம்.டிசம்பர் 10ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். உச்சநீதிமன்றம் அதிருப்தி. புதுடெல்லியில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 93 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போதுள்ள பாராளுமன்ற கட்டிடம் Edwin Lutyens மற்றும் Herbert Baker ஆகிய இரு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இதன் பணிகள்  1922 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு  6 ஆண்டுகள் அதன் பணிகள் நடைபெற்றன. 1927 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.  தற்போதுள்ள கட்டிடத்தில் இடப்பற்றாக்குறையால் மோடி தலைமையிலான பாஜக அரசு புதிய பாராளுமன்ற கட்டிடம்  கட்டுவதற்கான பணிகளை தொடங்கியது. 

parliament of india

 

இதன் அடிக்கல் நாட்டு விழா வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பழைய கட்டடத்தின் அருகிலேயே புதிய கட்டுமானத்திற்கான நிலங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மொத்தம், 971 கோடி ரூபாய் செலவில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளது புதிய கட்டடம். 

இந்த கட்டடத்திற்கான வடிவமைப்பு பணிகளை  குஜராத்தை சேர்ந்த ‘ஹெச்.பி.சி., டிசைன்ஸ்’ என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இதன் கட்டுமான பணிகள் “டாடா ப்ராஜெக்ட்ஸ்” நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்குபெறுகிறார். அதன் பிறகு கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று 2022 ஆம் ஆண்டு நிறைவடைய இருக்கின்றன. 2022 ல் பயன்பாட்டுக்கு வருமென்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

new parliamnt of india design

மேலும், கட்டுமான பணிகள்  தொடர்பான வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.  அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதி, வழக்கு நிலுவையில் உள்ளபோது எப்படி காட்டுமான பணிகளை தொடங்கலாம், அதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் சுசார் மேத்தாவை, கட்டுமான பணிகள் நடைபெறவில்லை என உறுதிப்படுத்துங்கள் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதிய பாரளுமன்ற கட்டிட பணிகள் தற்போது மேற்கொள்ளப்படாது என மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. 

 

Read Also : இம்மாத தேர்வும் ஆன்லைனில்|உயர்கல்வித்துறை அறிவிப்பு

Follow us on Facebook and Instagram:

Top