புதிய சிபி மாடலை வெளியிட்டது”ஹோண்டா”

H’ness

பைக் நிறுவனங்களின் முன்னணி நிறுவனமான ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஹய்நெஸ் சி.பி.350 மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது.கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மிக பிரம்மாண்டமாக வெளியிட்டுள்ளது.சி.பி.ரக வாகனங்களை 1949 முதல் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.தற்போது இது வரை 400மில்லியன் விற்பனை செய்துள்ளது.உலக நாடுகளில் 35 தொழிற்ச்சாலைகளை கொண்டுள்ளது.21 நாடுகளில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

சி.பி. ரக வாகனங்களை முதல் முதலாக 1959ல் அறிமுகப் படுத்தியது.இன்று அது பல மடங்கு வளர்ச்சி பெற்று பிக் பைக் பிஸ்னஸ்ஸாக உருவெடுத்துள்ளது.ஹோண்டா நிறுவனத்தின் சி.இ.ஓ. பேசுகையில், புதிய ஹய்நெஸ் சி.பி.350 என்கின்ற வண்டியின் பெயரின் சுருக்கமே ஹச் நெஸ் சி.பி.350 ஆகும்.இதன் சிறப்பம்சம் வண்டியின் வடிவமைப்பே ஆகும்.

இது வரை இல்லாத மிக அழகான,8 கலரில்,அட்வான்ஸ்ட்டு ஸ்பீடா மீட்டர்,வண்டியின் வாய்ஸ் கண்ட்ரோல்,மிக துல்லியமான எல்.இ.டி. வெளிச்சங்களுடன் கூடிய சிறப்பம்சங்கள் இதில் உள்ளன.மேலும் 350சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.இந்த இன்ஜின் லாங் ஸ்டோக் என்று சொல்லப் படுகின்ற அதி நவீன தொழில்நுட்பம் கொண்டவை.

ஹோண்டா

இந்த பைகில் யூஎஸ்பி சார்ஜர்,வைஃபை,ப்ளூடூத்,போன்ற வசதிகளும் உள்ளன.பைக் உடன் இரண்டு கிளவுசுகள்,ஹெல்மெட்,ஜெர்கின்,போன்ற சில ஆக்சரிசுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.இதன் விலை ஏற தாழ 1.9லட்சங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஹோண்டா

இந்த மாடல் வெளியான சில மணி துளிகளிலே அனைவரின் மத்தியிலும் கவர்ந்தது.குறிப்பாக இதன் விலைகள் அனைவரையும் ஈர்த்தது.நிகழ்ச்சி இறுதியில் பிரபல ட்ரம்ஸ் இசை கலைஞர் ட்ரம்ஸ் மணி இசையில் தீம் மியூசிக் இசைக்கப்பட்டது.மற்ற சிபி ரகங்கள் போலவே இந்த ரகமும் அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top