Main Menu

What’s New?

Connect With Us

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

modi pm
Read Carefully

SHARES

 பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று  ஏழாவது முறையாக நாட்டு  மக்களுக்கு உரையாற்றினார். கொரோனா காலகட்டத்தில் இதுவரை ஆறு முறை உரையாற்றியுள்ளார் பிரதமர். 

கொரோனா தடுப்பூசி பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆறு  மணியளவில் உரையாற்றினார்.

பாரத பிரதமர் உரையாற்றியது பின்வருமாறு…

நாட்டு மக்கள் அனைவரும் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு வீடுகளில் இருந்து வெளிவர தொடங்கியுள்ளனர். நாட்டின் நிலைமை ஸ்திரத்தன்மையோடு உள்ளது. நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக உயர்ந்துவருகிறது.  கொரோனாவின் பரவல் வேகமாக தொடங்கியுள்ளது. ஆனால், பலி எண்ணிக்கை படிப்படியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்க ஆரம்பமாகியுள்ளது. அதனை கட்டுக்குள் கொண்டு வருவதில் இந்தியா தீவிரமாக பணிசெய்து வருகிறது.  தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு இந்திய விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தியா, கொரோனா பாதிப்பில் இருந்து வேகமாக மீண்டு வருகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு நாடு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதுவே, கொரோனா பாதிப்பில் இருந்து மீள உதவும். 

இந்தியாவில், இதுவரை 90 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.  நாட்டு மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது. கொரோனாவுக்கு எதிரான போராட்டம் தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை தொடரும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் நோய்த்தொற்று பரவும் வேகம் வெகுவாக குறைந்துள்ளது.

ஒவ்வொரு இந்தியருக்கும் தடுப்பூசி சென்றடைய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. விரைவில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி சென்றடைய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 200 ஆராய்ச்சி மையங்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக செயல்பட்டுவருகின்றன.

பண்டிகைகள் நெருங்கி வருவதால் மக்கள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தீபாவளி, ஈத், தசரா, குருநானக் ஜெயந்தி போன்ற பண்டிகைகள் வருவது மகிழ்ச்சியான செய்தி என்றாலும் மக்கள் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியம்.  தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரையில் மக்கள் வெளியில் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணியவேண்டும்.

இவ்வாறு, திரு.நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

Follow us on Facebook and Instagram:

CHENNAIYIL FACEBOOK

CHENNAIYIL INSTAGRAM

 

Top