Main Menu

What’s New?

Connect With Us

IRANDAM KUTHU படத்தின் இயக்குனர் மன்னிப்பு கோரினார்.

irandam-kuthu-director-santhosh-p-jayakumar-sorry-to-director-bharathiraja-
Read Carefully

SHARES

IRANDAM KUTHU (இரண்டாம் குத்து) படத்தின் போஸ்டர் பார்த்துவிட்டு தனது கண்டனத்தை  தெரிவித்தார் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அதற்கு, கடுமையாக பதிலளித்த இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.  

 
பாரதிராஜா கண்டனம் : 
 

“ஹரஹர மஹாதேவகி” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். இரண்டுமே அடல்ட் காமெடி என்பதால் வெளியீட்டின் போது பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால், படங்கள் வெளியாகி நல்ல வசூலைப்பெற்றன. இப்போது “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகமாக “இரண்டாம் குத்து” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், சந்தோஷ் ஜெயக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இது ஆபாசமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

 
இதற்கு பலதரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள், “இரண்டாம் குத்து என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் பார்ப்பதற்கே கண் கூசுகிறது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதனை பார்க்கும்? என்று கேள்வி எழும்பியது.  
 
எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் வெளியிடுவதற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை?  நாளை இன்னும் எத்தனை கேவலங்களை காண இருக்கிறோம் என்றும் தெரியவில்லை என கவலை கொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்களின் வீட்டில் பெண்கள் இல்லையா? அவர்கள் இதனை கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிக்கிறர்களோ இல்லையோ, மூத்தவர் என்ற முறையில் நான் கண்டிப்பேன் என்று கூறியுள்ளார். 
 
 
சந்தோஷ் ஜெயக்குமார் பதில்  : 
 
அதற்கு ட்விட்டரில் , பதிலளித்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார். அதில் பாரதிராஜா இயக்கிய “டிக் டிக் டிக்” படத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று ஹீரோயின்கள் நீச்சல் உடையில் நிற்கின்றனர். ‘1981 -ல் இதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசிருச்சோ ? என கிண்டல் செய்துள்ளார். இளம் இயக்குனருக்கும், தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குனருக்கும் ஏற்பட்ட இந்த மோதல் சினிமா வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
மீண்டும் பதில் :
 
iruttu
 
 
தற்போது, இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார். “இயக்குனர் பாரதிராஜாவின் அறிக்கைக்கு அப்படியொரு பதிலை நான் தந்திருக்க கூடாது.   அவசரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல், செய்து விட்டேன். அடுத்து வரும் படத்தின் போஸ்டர்கள் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும், என உறுதியளிக்கிறேன், என கூறியுள்ளார். அவர் கூறியதற்கு நன் அவ்வாறு எதிர்வினையாற்றியது தவறுதான்.  அதற்கு  வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
இதற்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா என்ன பதில் அளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
 
 
 
 
Top