Main Menu

What’s New?

Connect With Us

“நிசப்தம்” படத்தில் என்ன உள்ளது?

anushka
Read Carefully

SHARES

 

 

ஓடிடியில் சமீபத்தில் வெளியான “நிசப்தம்” படம் அனைவரின் மத்தியிலும் வரவேர்ப்பினை பெற்றுள்ளது.கடந்த 2ம் தேதி வெளியான இப்படத்தில் மாதவன்,அனுஷ்கா ஷெட்டி,அஞ்சலி,மைகேல் மடசேன்,ஷாலினி பாண்டே,சுப்பாராஜு,ஸ்ரீனிவாஸ் அவசரளா,நடித்துள்ளனர்.ஷானில் டியோ ஒளிப்பதிவு செய்ய ஹேமந்த் மதுக்கர் இயக்கியுள்ளார்.படத்தின் தொடக்கத்தில் ஒரு வீட்டில் கணவன்,மனைவி,உள்ளனர்.கணவன் ஒரு அறைக்குள் செல்ல,அங்கு த்ரில்-லான சில சம்பவங்கள் நடக்கின்றன.மனைவி கணவனை தேடி அந்த அறைக்குள் செல்கிறாள்.தன் கணவன் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியாகிறாள்.பின்னர் அவளுக்கும் சில த்ரில்-லான சம்பவங்கள் நடக்கின்றன.அங்கே படம் கட்டாகி படத்தின் டைட்டில் போடப்படுகிறது.

பின்னர் மேலே கூறிய இதே கதை பாணியில்,அதே வீட்டிற்குள் மாதவனும்,அனுஷ்காவும்,செல்கின்றன.“அப்போ மாதவன் இறந்து விடுவாரா”? என உங்கள் மனதில் கேள்வி வரலாம்.அதனை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.இப்படியாக தொடக்கம் முதல் கண்களை நகர்த்தாமல் படத்தை த்ரில்-லாக திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் படத்தில் தயாரிப்பளாளரும்,இப்படத்தின் திரைக்கதை எழுதியவருமான கோனா வெங்கட்.

தமிழ்,தெலுங்கு,அங்கிலம் என மும்மொழிகளில் வெளியாகி உள்ளது.படத்தில் ஆரம்பத்தில் சற்று மெதுவாக சென்றாலும், கதை நகரநகர படத்தில் விறுவிறுப்பு வருகிறது.மலையாளதிரை உலகின் முன்னணி இசையமைப்பாளரான கோபி சுந்தர் இப்படத்திற்கு பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்துள்ளார்.ஏனோ தெரியவில்லை தமிழில் அவர் இசை அமைத்த பாடல்கள் யாவும் பெரியதாக பேசப்படுவதில்லை.அது இப்படத்திற்கும் பொருந்தும்.

இப்படத்திற்கு பின்னணி இசை அதாவது பிஜியம் செய்தவர் கிரிஷ்ஹ்.ஜி.இவர் “மெரினா” திரைப்படம் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமானவர். “நிசப்தம்” படத்திற்கு காட்சிக்கு ஏற்றார் போல் மிக கட்சிதமாக பின்னணி இசையை கொடுத்துள்ளார்.படத்திற்கு இவரின் பின்னணி இசை பக்கபலமாக அமைந்துள்ளது.இதற்கு அடுத்தபடியாக படத்தில் நடித்த போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி.தன் இயல்பான நடிப்பை காட்டியுள்ளார்.மொத்தத்தில் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய “நிசப்தம்” படத்தை பார்த்தவுடன் ,”அப்பாடா…படம் ஒர்த்துடா”….. என நினைக்க தோன்றும்.

Top