Main Menu

What’s New?

Connect With Us

டும்…டும்…டும்…வேண்டாம் என்கிறாராம்,நயன்.

Read Carefully

SHARES

 

மலையாள சினிமாவில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நயன்தாரா,2005ல் ஹரி இயக்கத்தில் “ஐயா” திரைப்பட மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.ஐயா படம் வெற்றி பெற்றாலும் நயன்தாரா பிரபலமாக வில்லை.அதே ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து “சந்திரமுகி” படத்தில் நடித்தார்.இதன் மூலமாகவே நயன்தாரா தமிழ் ரசிகர்களுக்கு அறியப்பட்டார்.பேரரசு இயக்கத்தில் “சிவகாசி” படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார், நயன். இதில் இருந்து தமிழ் ரசிகர்களை கவர ஆரம்பித்தார்.”கஜினி”,”கள்வனின் காதலி”,”வல்லவன்”,போன்ற படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

வல்லவன் படத்தில் சிம்பு உடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் காரணமாக சிம்பு உடன் கிசுகிசுக்கப் பட்டார்.சிறுது காலத்தில் அவர்களுக்குள் காதலாக மாறியது.இருவரும் சேர்ந்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளைங்களில் பரவியது.சிம்புவும்,நயன்தாராவும்,திருமணம் செய்துக்கொள்ள போவதாக பேசப்பட்டது.இரு வீட்டாரும் சேர்ந்து திருமணம் பற்றி முடிவு செய்வார்கள் என எதிர் பார்த்த நிலையில்,திடீர் என இருவருக்குள் இருந்த உறவு முறிந்தது.பின்னர் படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த, நயன்தாரா.தனுஷுடன் சேர்ந்து “யாரடி நீ மோகினி” திரைப்படத்தின் மூலமாக ஸ்டார் அந்தஸ்து நடிகையாக உயர்ந்தார்.

2009ல் பிரபு தேவா இயக்கத்தில் விஜய் உடன் “வில்லு” படத்தில் நயன்தாரா நடித்தார்.இதில் பிரபு தேவாவிற்கும்,நயன்தாராவிற்கு காதல் மலர்ந்தது.பிரபு தேவாவின் பெயரை தன் கையில் பச்சைக் குத்திக்கொண்டார்,நயன்தாரா.இதனால் பிரபு தேவாவிற்கும்,அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு,பிரிந்து விவாகரத்து பெற்றன.இவர்களுக்குள் இருக்கும் காதல், நிச்சயம் வரை சென்றது.யார் கண்கள் பட்டதோ திருமணம் நடக்காமல் இருவரும் பிரிந்தனர்.”பாஸ் என்கின்ற பாஸ்கர்” திரைப்படம் மூலமாக”லேடி சூப்பர் ஸ்டார்” என்கின்ற இடத்திற்கு சென்றார்.”ராஜா ராணி”,”ஆரம்பம்”,”தனிஒருவன்”,போன்ற படங்களில் நடித்து இந்திய மக்களை வெகுவாக ரசிக்க வைத்தார்.

“நானும் ரெளடி தான்” படம் மூலமாக அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார்.ஆனால் இப்படம் வருவதற்கு முன்பில் இருந்தே விக்னேஷ் சிவனை காதலித்ததாக கூறப்படுகிறது.இந்த காதல் மிகவும் ஆழமாக இருப்பதாக தெரிகிறது.இரு வீட்டார்களும் சம்பதித்துவிட்டனர்.சீக்கிரம் நயன்தாராவுக்கு டும்…டும்…டும் என அனைவரும் எதிர்ப்பார்த்தனர்.ஆனால் நயன்தாரா தற்போது ஒரு புதிய குண்டை தூக்கிப்போட்டு விட்டார்.

ஆம்…! நான் ஒரு திரைப்படத்திலாவது தேசிய விருது வாங்கியே தீரவேண்டும் என்று ஒற்றை காலில் நிற்கிறராம்.அதன் பின்னர் தான் கல்யாணம் என கறாராக நயன்,விக்னேஷிடம் கூறிவிட்டாராம்.இதனால் விக்னேஷ்சிவன்,நயன்தாராவிற்காக கதைகளை தேடி வருகிறார்.இதனை கேள்விப்பட்ட பல இயக்குனர்கள் நயனுக்கு கதைகளை ரெடி செய்ய தொடங்கிவிட்டனர்.பலரும் நயன் கால்ஷீட்டிற்காக வைட்டிங்.

Top