தீபாவளி சிறப்பாக 3 தமிழ் படங்களின் TRAILER : EXCLUSIVE UPDATE. திரையரங்குகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. ஆனால், புது படங்கள் எதுவும் வெளியாகாது என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது, சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் “பிஸ்கோத்” படமும், பல சர்ச்சைகளுக்குள்ளான “இரண்டாம் குத்து” படமும் வெளிவர இருக்கின்றன. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இதனால், சில படங்களின் ட்ரைலர்/ டீஸர் தீபாவளியன்று வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவை…
ஈஸ்வரன் :
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள “ஈஸ்வரன்” படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தனது உடல் அமைப்பை மாற்றி திரையுலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார் சிம்பு. இதன் படப்பிடிப்பு தொடர்ச்சியாக 40 நாட்கள் நடைபெற்று ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதன் டீஸர் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது.
ஜகமே தந்திரம் :
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, “ஜகமே தந்திரம்” படத்தின் டீஸர்/ ட்ரைலர் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த படத்தின் “ரக்கிட ரக்கிட” பாடல் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இதன், படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வரும் தீபாவளி சிறப்பாக இதன் முன்னோட்டம் வெளியாக உள்ளது.
டாக்டர் :
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் “டாக்டர்” படத்தின் டீஸர் வெளியாக உள்ளது. “கோலமாவு கோகிலா” படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருந்து இசையமைத்துள்ளார். இப்படத்தின், இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் ட்ரைலர் தீபாவளி சிறப்பாக வெளியாக உள்ளது.
மாஸ்டர் :
இதுமட்டுமின்றி, தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள “மாஸ்டர்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வராத நிலையில் விஜய் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Also Read : SOORARAI POTTRU நாளை AMAZON PRIME -ல் வெளியாகிறது : புதுவிதமான ப்ரோமோஷனில் இறங்கிய படக்குழு.