Main Menu

What’s New?

Connect With Us

பலமாக மாறும் தமிழக பாஜக!|நடுங்கும் பிற கட்சிகள்…

Read Carefully

SHARES

கடந்த ஆறு மாதகாலமாக அதாவது கொரோனா லாக் டவுன் காலத்தில் இருந்தே பாஜக தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகிவிட்டது.திமுகவில் இருந்து வி.பி.துரைசாமி,கு.க.செல்வம் போன்றோர் பாஜக சேர்ந்தனர்.மேலும் திமுகவில் இருந்து பலரும் பாஜகவில் ஆய்க்கமாகினார்.காங்கிரசில் ஒரு பலமான தலைவர் அமையாததால் அக்கட்சியில் இருந்த அடிப்படை உறுப்பினர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பாஜகவில் இணைந்து வருகின்றன.அதே போல் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகாவில் இணைந்து தமிழகத்தின் பாஜக துணைத்தலைவராக பொருப்பேற்று சிறப்பாக செயலாற்றி வருகிறார்.

பாஜகவிற்கு மேலும் ஒரு பலமாக,காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும்,நடிகையுமான குஷ்பு நேற்று பாஜகவில் இணைந்தார்.இதனால் அனைவரின் பார்வையும் பாஜகவின் மீது திரும்பியது.தற்போது தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளார்.குஷ்பு இணைந்த அதே மேடையில் இருவரும் இணைந்துள்ளார்.இவரின் விவாதங்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும்,திமுகவிற்கு எதிராக இவர் நடத்தும் விவாதங்கள் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்தும்.

தற்போது இவர் பாஜகவில் உறுப்பினராகி இருப்பதால் திமுகவை இன்னும் கடுமையாக தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.இதனால் பாஜகவின் பலம் கூடிக்கொண்டே செல்கிறது.இந்த பலம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு கைக்கொடுக்குமா?பொரு த்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Top