Main Menu

What’s New?

Connect With Us

 தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் (TFPC) முடிவுகள் : முரளி அணி பெரும் வெற்றி!

TFPC
Read Carefully

SHARES

 தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் முடிவுகள் : முரளி அணி பெரும் வெற்றி!

TR IN PRODUCER COUNCIL ELECTION

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் (TFPC) நேற்று முன்தினம் நடைபெற்றது. இதன் முடிவுகள் அன்றே வெளியிடப்பட்டன. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராமசாமி என்னும் முரளி அவர்கள் வெற்றிபெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரபல இயக்குனரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான திரு.டி.ராஜேந்திரன் 169 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 

இதன்மூலம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக திரு. முரளி அவர்கள் தேர்ந்தெக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கதிரேசன் திரு. கதிரேசன் அவர்கள் வெற்றிபெற்றுளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திரு.R.K. சுரேஷ் 74 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பொருளாளர் பதவிக்கு திரு. சந்திர பிரகாஷ் ஜெயின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும், கெளரவ செயலாளர் பதவிக்காக திரு. ராதாகிருஷ்ணனும், திரு.  மன்னன் அவர்களும் தேர்ந்தெக்கப்பட்டுள்ளனர். 

இந்த தேர்தலில், துணை தலைவராக வெற்றிபெற்ற கதிரேசன் சுயேச்சையாக போட்டியிட்டனர். மேலும், கெளரவ செயலாளர் பதவிக்கு வெற்றிபெற்ற மன்னன், டி. ராஜேந்திரன் அணிக்காக போட்டியிட்டவர். மீதமுள்ள  பதவிகளுக்கு போட்டியிட்டவர்கள் அனைவரும் முரளி அணியை சேர்ந்தவர்கள். ஒட்டுமொத்தத்தில், முரளி அணியை சேர்ந்தவர்களே அதிகம் வெற்றி பேட்ற்றுள்ளனர்.

தலைவர் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம் :

மொத்தம் பதிவான வாக்குகள்-1050

ராமசாமி @முரளி – 557

டி.ராஜேந்தர் – 388

தேனப்பன் – 88

செல்லாதவை – 17

துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலின் வாக்குகள் விவரம் : 

கதிரேசன் – 493

R.K.சுரேஷ் – 419

P.T.செல்வகுமார் – 305

பாண்டியன் – 277

சிங்காரவேலன் – 193

முருகன் – 110

மதியழகன் – 50

பொருளாளர் பதவிக்கான தேர்தலின் வாக்கு விபரம் : 

சந்திர பிரகாஷ் ஜெயின் – 407

K.ராஜன் – 382

J.S.K சதீஷ்குமார் – 233

செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் : 

1) ஆர்.வி.உதயகுமார் – 598

2) அழகன் தமிழ்மணி – 470

3) மனோபாலா – 431

4) கே.பி.பிலிம்ஸ் பாலு – 425

5) மனோஜ்குமார் – 420

6) ஷக்தி சிதம்பரம் – 419

7) செளந்தரபாண்டியன் – 414

8) ஆர்.மாதேஷ் – 397

9) விஜயமுரளி – 396

10) ஏ.எல்.உதயா – 394

11) பைஜா டோம் – 366

12) டேவிட் ராஜ் – 352

13) பாபு கணேஷ் – 343

14) ராஜேஸ்வரி வேந்தன் – 341

15) ஏ.எம்.ரத்னம் – 339

16) அன்பாலயா கே.பிரபாகரன் – 326

17) K.K.ராஜ்சிற்பி – 326

18) வி.பழனிவேல் – 310

19) எஸ்.ராமச்சந்திரன் – 308

20) பிரைமுஸ்தாஸ் – 297

21) வீ.சரவணன் – 283

இவர்களில்,

1. அழகன் தமிழ் மணி (EC-7)

2. K.பாலு (EC-11)

3. G.M.டேவிட் ராஜ் (EC-15)

4. R. மாதேஷ் (EC-32)

5. பழனிவேல் (EC-40)

6. ராஜேஸ்வரி வேந்தன் (EC-53)

7. K.K.ராஜ்சிற்பி (EC-55)

8. S.ராமச்சந்திரன் (EC-57)

9. S.சௌந்தரபாண்டியன் (EC-74)

10. N.விஜயமுரளி (EC-89)

11. A.L.உதயா (EC-92)

12. R.V.உதயகுமார் (EC-93) 

ஆகிய 12 பேர் முரளியின் ‘தயாரிப்பாளரின் நலன் காக்கும் அணி’யைச் சேர்ந்தவர்கள்.

 

Read Also : சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இயக்கும் “என்றாவது ஒரு நாள்” : விதார்த் | ரம்யா நம்பீசன் 

Follow us on Facebook and Instagram:

Top