SHARES
இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் வெளியீடு.
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனரும் – இளம் இயக்குனரும் மோதல்.
இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர் வெளியீடு.
தமிழ் சினிமாவில், கொரோனா ஊரடங்கில் திரைத்துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அரசு அறிவித்த தளர்வுகளின்படி படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன. அதற்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களின் இறுதி கட்ட பணிகள் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டன. அதில் ஒரு படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியாவதற்கு தயாராக இருக்கும் நேரத்தில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
ஆபாச போஸ்டரால் சர்ச்சை :
“ஹரஹர மஹாதேவகி” , “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் சந்தோஷ் ஜெயக்குமார். இரண்டுமே அடல்ட் காமெடி என்பதால் வெளியீட்டின் போது பல எதிர்ப்புகள் வந்தன. ஆனால், படங்கள் வெளியாகி நல்ல வசூலைப்பெற்றன. இப்போது “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தின் இரண்டாம் பாகமாக “இரண்டாம் குத்து” என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தில், சந்தோஷ் ஜெயக்குமார் ஹீரோவாக நடித்துள்ளார். இதன் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இது ஆபாசமாக இருப்பதாக சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இதற்கு பலதரப்பில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. அதில் குறிப்பாக இயக்குனர் பாரதிராஜா அவர்கள், “இரண்டாம் குத்து என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் பார்ப்பதற்கே கண் கூசுகிறது என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதனை பார்க்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கின்ற இடத்தில் காமத்தை போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் வெளியிடுவதற்கு சுதந்திரம் எப்படி கிடைத்தது என்று தெரியவில்லை? நாளை இன்னும் எத்தனை கேவலங்களை காண இருக்கிறோம் என்றும் தெரியவில்லை என கவலை கொள்கிறேன். இதையெல்லாம் செய்பவர்களின் வீட்டில் பெண்கள் இல்லையா? அவர்கள் இதனை கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிக்கிறர்களோ இல்லையோ, மூத்தவர் என்ற முறையில் நான் கண்டிப்பேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் பதில் :
அதற்கு ட்விட்டரில் , பதிலளித்துள்ளார் இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார். அதில் பாரதிராஜா இயக்கிய “டிக் டிக் டிக்” படத்தின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மூன்று ஹீரோயின்கள் நீச்சல் உடையில் நிற்கின்றனர். ‘இதை பார்த்து கூசாத கண்ணு இப்போ கூசிருச்சோ ? என கிண்டல் செய்துள்ளார். இளம் இயக்குனருக்கும், தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குனருக்கும் ஏற்பட்ட இந்த மோதலால் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற படங்களை வெளியிடுவது, அடுத்து வரும் தலைமுறைகளை நாமே சீரழிக்கும் செயலாகும். இப்போது உள்ள காலக்கட்டத்தில் அனைத்து வயதினரின் கைகளிலும் மொபைல் போன்ற சாதனங்கள் உள்ளது. அவற்றைக்கொண்டு அனைவரும் காண நேரிடும்.
Also Read: Suicide! Why is it so famous than anyone/anything in this world?!
Follow us on Facebook and Instagram:
SHARES