தமிழ் சினிமாவின் அடுத்த வாரிசு நடிகர் : அல்டி | ANBU MAYILSAMY.
ANBU MAYILSAMY : தமிழ் சினிமாவில் பொதுவாக பெரிய நடிகர்களின் வாரிசுகள் அல்லது அவர்களது குடும்பத்தில் யாரவது ஒருவர் சினிமா துறைக்கு வருவது வழக்கம். உதாரணமாக, நடிகர் சிவாஜியின் மகன் பிரபு, பிரபுவின் மகன் விக்ரம் பிரபு. அதேபோல், நடிகர் முத்துராமனின் மகன் தான் நவரச நாயகன் கார்த்திக், அவரின் மகன் கவுதம் கார்த்திக். இந்த வழக்கம் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் அனைத்து துரையிலும் பொதுவானவை. அதில், சிலர் வெற்றி காண்பர். சிலரின் திரைப்பயணம் ஓரிரு படங்களிலேயே முடிந்து விடும். அதேபோல், சில நகைச்சுவை நடிகர்களின் வாரிசுகளும் நடிப்பில் தடம் பதித்துள்ளனர். உதாரணமாக, நாகேஷ் அவர்களின் மகன் ஆனந்த் பாபு. தம்பி ராமய்யா மகன் உமாபதி ராமய்யா. அந்த வரிசையில், தற்போது நடிகர் மயில்சாமியின் மகன் ANBU MAYILSAMY நடிகராக அறிமுகமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி கடந்த நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த ‘அல்டி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார். ‘அல்டி’ என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜெ.உசேன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் ‘அல்டி’ மிகவும் பேசப்படுகின்ற படமாக வெற்றிநடை போட்டு வருகின்றது.
முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார். மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக ‘அல்டி’ கலக்கி வருகின்றது.
அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. மொத்தத்தில் மக்கள் ரசிக்கும் அசத்தல் திரைப்படமாக அல்டி அசத்தி வருகின்றது. அன்பு மயில்சாமியின் திரைப்பயணம் தொடர்ந்து வெற்றிபெற வேண்டும் என்பது சினிமா வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Read Also : மலையாள படம் “ஜல்லிக்கட்டு” : நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு தேர்வு | JALLIKATTU | OSCAR.
Follow us on Facebook and Instagram: