Main Menu

What’s New?

Connect With Us

திமுகவுடன் கூட்டணி|பொன்.ராதாகிருஷ்ணன்|அதிர்ச்சியில் அதிமுக!

Pon-Radhakrishnan
Read Carefully

SHARES

Indian-political-parties

அரசியலில் எது வேண்டுமானாலும்,நடக்கலாம் என்று கூறுவார்கள்.ஆனால் இது தமிழக அரசியலுக்கு மட்டும் பொருந்தாது.தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக,திமுக,என இரண்டு கட்சிகள் மட்டுமே மாறிமாறி ஆட்சியை பிடிக்கும்.இந்த இரு கட்சியின் தலைவர்கள் மறைந்துவிட்டதால் தற்போது தமிழக அரசியலில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்ப்பட்டு வருகிறது.குறிப்பாக கமல் கட்சியை தொடங்கி வெற்றிகரமாக செயலாற்றி வருவது,ஸ்டாலினுக்கு தமிழகத்தில் வரவேற்ப்பு,எடப்பாடி முதல்வரானது,தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு உடல்நிலை பாதித்தது,பாஜாவின் ஆதிக்கம் தமிழகத்திற்கு வந்தது,ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக கூறியது.போன்றவை தமிழகத்தில் முக்கிய அரசியல் மாற்றமாக பார்க்கப்படுகிறது.

Pon-Radhakrishnan-minister

இந்நிலையில் புதியதாக அதிமுக மட்டுமின்றி திமுகவுடனும் கூட்டணி சேர வாய்ப்புள்ளதாக,முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜாக பிரபலருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த பாஜக தற்போது வரை அதே கூட்டணியில் தான் தொடர்ந்து உள்ளது.ஆனால் திடீரென முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,திமுகவுடனும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

os-maniyan

இதற்கு திமுகவும் எவ்வித மறுப்பையும் தெரிவிக்காமல் இருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.இதற்கு அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது,கல்யாண வீட்டில் சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்து விட்டு செல்வது போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்.அமைச்சர் கூறிய கருத்துக்கும் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.1999ல் திமுக,பாஜகவுடன் கூட்டணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Top