ஐ.பி.எல்., போட்டி நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது முறையாக தோல்வியை தழுவியது.
ஐ.பி.எல்., தொடரின் 13 -வது சீசன் இந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடக்கிறது. நேற்று துபாயில் நடை பெற்ற லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற வார்னரின் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
சன் ரைசர்ஸ் எழுச்சி :
பேட்டிங்கில் களம் இறங்கிய ஹைதராபாத் அணி. தொடக்கத்தில் வார்னர் (28), மணிஷ் பாண்டே (29), அணியின் தொடக்க ரன்களுக்கு உதவினர். அடுத்து களமிறங்கிய வில்லியம்சன் (9) ரன்களை மட்டுமே எடுத்தார். இளம் வீரர் பிரியம் கார்க், அரைசதம் (51) கடந்தார். இறுதியாக, கார்க் (51), அப்துல் சமத் (8) அவுட் ஆகாமல் இருந்தனர். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது. சென்னை அணியில் சஹார் 2 விக்கெட், பியூஸ் சாவ்லா, ஷர்துரல் தாக்கூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னையின் பேட்டிங் சொதப்பல் :
இரண்டாவதாக பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில், வாட்சன் (2). அம்பதி ராயுடு (8), டுப்லெஸி (22), கேதர் ஜாதவ் (3), ரன்களை மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை தந்தனர்.
ஜடேஜா 50 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். தோனியும், ஜடேஜாவும் சேர்ந்து கடைசி மூன்று ஓவர்களில் ரன்களை சேகரிக்க முயன்றனர்.
கடைசி ஓவரில் 28 ரன்கள் தேவைப்பட்டன. தோனியுடன், சாம் கர்ரானும், இனணந்தனர். அப்துல் சமத் வீசிய முதல் பந்து wide -ஆக, பௌண்டரிக்கு சென்றதில் 5 ரன்கள் சேர்ந்தன. மீண்டும் வீசப்பட்ட முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தனர். கடைசி 3 பந்துகளில் பவுண்டரி உட்பட 8 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தொடர்ச்சியாக 3 -வது தோல்வியாகும்.
இந்த ஆட்டத்தின் போது கடைசி 3 ஓவர்களில் தோனி, ஜடேஜா மற்றும் சாம் கர்ரானுடன் சேர்ந்து ரன்களை குவிக்க முயலும்போது தோனிக்கு உடல் நிலை ஒத்துழைக்கவில்லை என்பதே உண்மை. இரன்டு, மூன்று ரன்களை சேர்க்க தொடர்ந்து ஓடியபோது தோனிக்கு மூச்சிரைச்சல் ஏற்பட்டது. துபாயில் சாதாரணமாக 34°C செல்சியஸ் வரை இருக்கும் என்பதால் வீரர்கள் அங்கு விளையாட சிரமப்படுகிறார்கள்.

ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும் தோனி எடுத்த சிரமம், மற்றும் முயற்சி ரசிகர்களை கண்கலங்க வைத்தது. அவ்வளவு கடுமையான சூழலிலும் தோனி, அணியின் வெற்றிக்கு பாடுபட்டது “தல தோனியின்” ரசிகர்களையும் சென்னை அணியின் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்தது.
Also read: The INS Viraat dismantling process begins at Alang, Gujarat.