சென்னை அணிக்கும் டெல்லி அணிக்கும் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது.
துபாயில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ்க்கு எதிரான போட்டியில் சென்னை அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
பிரித்திவி ஷாவின் அதிரடி ஆட்டத்தாலும், நெருக்கடியான பந்து வீச்சாலும் டெல்லியை சமாளிக்க முடியாமல் திணறியது சீனியர் டீம் “சென்னை சூப்பர் கிங்ஸ்”
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டியில் தோல்வி அடைந்து 5 – வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
நடப்பாண்டு ஐபில் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.7ஆம் நாளான நேற்று துபாயில் சென்னை சூப்பர் கிங்ஸ் -ம் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி தொடக்கம் முதலே அதிரடியை காட்டியது. எப்போதும் சிறிது நேரத்தில் ஆட்டமிழக்கும்
டெல்லியின் அசத்தல் பேட்டிங்
பிரித்திவி ஷா நேற்றைய ஆட்டத்தில் தொடக்கம் முதலே நிதானத்தை கடைப்பிடித்து 43 பந்துகளில் 64 ரன்களை குவித்து பியூஸ் சாவ்லா வீசிய ஓவரில் ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய ஷிகர் தவான் சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். பின்பு தொடர்ச்சியாக களம் இறங்கிய ரிஷப் பண்ட்,ஷ்ரேயஸ் ஐயர், மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளிட்டோர் அணியின் ரன்களுக்கு உதவினர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கலம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தின் முதலே டெல்லியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியின் பேட்ஸ்மன்கள் டூப்லெஸிஸ் தவிர யாருடைய ஆட்டமும் அணிக்கு பெரிதாக உதவவில்லை.
அசத்தல் பந்துவீச்சு :
சிஎஸ்கே (csk) அணியை தனது பந்துவீச்சில் மிரட்டிவிட்டது டெல்லி அணி.
ரபாடா, நார்ஜே , மிஸ்ரா , பட்டேல் 4 பெரும் சேர்ந்து பந்துவீச்சில் மிரட்டினர்.
குறிப்பாக 7வது ஓவரில் இருந்து 10 வது ஓவர் வரை ஒரு பவுண்டரிகள் கூட அடிக்கவிடாமல் மிரட்டினர்.இதில் நார்ஜே வீசிய 145 கி .மீ வேக பந்துகளில் சென்னை கதிகலங்கி போனது.டெல்லியின் பவுலிங் மாற்றங்கள் சிஎஸ்கே வீரர்களை திணறடித்தது.
சென்னையை காலிசெய்தது டெல்லி :
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியிலும் பேட்டிங் படுமோசமாகி வருகிறது.டூப்லெஸிஸ் மட்டும் விளையாடினால் போதுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது.முரளி விஜய், கெய்க்வாட், வாட்சன், தோனி , ஜாதவ் உள்ளிட்டோர் பேட்டிங்கில் சொதப்புகின்றனர்.
தோனியின் முடிவு :
சென்னையின் முதல் ஆட்டத்தில் விளையாடிய ராயுடுவை அடுத்த 2 ஆட்டத்தில் களமிறக்காதது அணிக்கு பெரும் இழப்பு. ராயுடு, ரெய்னா, பிராவோ போன்ற வீரர்கள் இல்லாமல் சென்னை அணி திணறுவதை பார்த்து தோனி இனிவரும் ஆட்டங்களில் ஏதேனும் மாற்றங்களை கொண்டுவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோனி அடித்த பந்தை எடுத்து சென்ற அந்த அதிர்ஷ்டசாலி :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 25 ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ்-உடன் விளையாடிய 2வது போட்டியின் போது 217 என்ற இலக்கை அடைய விளையாடிகொண்டிருக்கும்போது . கடைசி ஓவரில் தோனி அடித்த 3 சிக்ஸ்ஸர்கள் மெய்சிலிர்க்கவைத்தன. அதில் ஒரு பந்து மைதானத்தின் வெளியில் சென்று விழுந்ததும் அதை அங்கிருந்த நபர் ஒருவர் எடுத்து செல்லும் கட்சியை ஒளிப்பதிவாளர் படமாக்கியுள்ளார்.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.