முன்பதிவு தொடக்கம்|சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

அடுத்த மாதம் 14ல் தீபாவளி வருவதையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அத்துடன் இன்று முதல் முன்பதிவைவும் செய்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் படி சென்னை — மதுரை உட்பட, முக்கிய நகரங்கள் இடையே, விழாக் கால, சிறப்பு ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவங்குகிறது.சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இரவு, 10:30 மணிக்கு இயக்கப்படும் சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில், மறுநாள் காலை, 7:20 மணிக்கு மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகளில், இரவு, 10:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 7:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, வரும், 19ம் தேதி; மதுரையில் இருந்து, 20ம் தேதி முதல் இயக்கப்படும்.சென்னை, சென்ட்ரலில் இருந்து, இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரயில், காலை, 7:10 மணிக்கு புறப்பட்டு, மதியம், 2:15 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையில் இருந்து, மாலை, 3:05 மணிக்கு புறப்பட்டு, இரவு, 10:15 மணிக்கு சென்னை வந்தடையும்.சென்னை சென்ட்ரலில் இருந்து, திங்கள், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் துரந்தோ ரயில், காலை, 6:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள், காலை, 10:40 மணிக்கு, டில்லி, ஹஜ்ரத் நிஜாமுதீன் சென்றடையும்.ஹஜ்ரத் நிஜாமுதீனில் இருந்து, செவ்வாய், சனிக்கிழமைகளில், மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு, 8:40 மணிக்கு சென்னை, சென்ட்ரல் வந்தடையும். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில், மாலை, 4:55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில், சனி மற்றும் திங்கள்கிழமைகளில், மதியம், 1:50 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் சென்றடையும். ஷாலிமரில் இருந்து, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், இரவு, 11:05 மணிக்கு புறப்பட்டு, வியாழன் மற்றும் செவ்வாய் கிழமைகளில், இரவு, 9:45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றைடையும். இந்த ரயில், திருவனந்தபுரத்தில் இருந்து, வரும், 22ம் தேதி; ஷாலிமரில் இருந்து, 27 ம் தேதி முதல் இயக்கப்படும்.கன்னியாகுமரியில் இருந்து, சனிக்கிழமைகளில், காலை, 8:00 மணிக்கு புறப்பட்டு, திங்கள் அதிகாலை, 3:10 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், ஹவுரா சென்றடையும்.

ஹவுராவில் இருந்து, திங்கள் கிழமைகளில், மாலை, 4:10 மணிக்கு புறப்பட்டு, புதன்கிழமை காலை, 10:50 மணிக்கு கன்னியாகுமரி சென்றடையும். இந்த ரயில், கன்னியாகுமரியில் இருந்து, வரும், 24ம் தேதி; ஹவுராவில் இருந்து, 26ம் தேதி முதல் இயக்கப்படும்.மேற்குவங்க மாநிலம், சந்திரகாசியில் இருந்து, செவ்வாய், மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இரவு, 7:05 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், இரவு, 10:45 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் வந்தடையும். எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், காலை, 8:10 மணிக்கு புறப்பட்டு, வெள்ளி மற்றும் திங்கள்கிழமைகளில், காலை, 10:30 மணிக்கு சந்திரகாசி சென்றடையும். இந்த ரயில், சந்திரகாசியில் இருந்து, நாளை முதலும்; சென்ட்ரலில் இருந்து, 1௮ம் தேதி முதல் இருந்தும் இயக்கப்படும்.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top