சுதந்திரத்திற்கான உரிமை Article 22. சுதந்திரத்திற்கான உரிமை என்பது நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பில், அரசியல் அறிஞர்களால் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமை சட்டங்கள் 19,20, 21A, மற்றும் 22 ஆகிய பிரிவுகள் உள்ளது. ARTICLE 22பற்றிய சிறு தொகுப்பினை காண்போம்.
பிரிவு 22 | ARTICLE 22 : Protection Against Arrest And Detention கைது மற்றும் தடுப்புக்காவலுக்கான பாதுகாப்பு :
கைது செய்ய்யப்பட்ட எந்தவொரு நபரும் அறிவிக்கப்படாமல் காவலில் வைக்கப்படமாட்டார்கள். காரணங்கள் விரைவில் அந்த நபருக்கு தெரிவிக்கப்படவேண்டும். கைது செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டவரை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்த வேண்டும்.
அதேபோல், ஒரு குற்றத்திற்காக ஒருவரை கைது செய்தால், எதிர்காலத்தில் எந்த ஒரு குற்றமும் அவரால் நடைபெற கூடாது என்பதற்காக அவரை எந்த விசாரணையும் இன்றி காவலில் வைக்கலாம்.