சுதந்திரத்திற்கான உரிமை Article 20. சுதந்திரத்திற்கான உரிமை என்பது நாட்டின் ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு அடிப்படை உரிமை. இந்திய அரசியலமைப்பில், அரசியல் அறிஞர்களால் உத்திரவாதம் அளிக்கப்பட்ட உரிமை சட்டங்கள் 19,20, 21A, மற்றும் 22 ஆகிய பிரிவுகள் உள்ளது. இது நான்கு முக்கிய சட்டங்களின் தொகுப்பு ஆகும். ARTICLE 20 பற்றிய சிறு தொகுப்பினை காண்போம்.
பிரிவு 20 குற்றங்களுக்கான தண்டனைக்கு பாதுகாப்பு அளிக்கிறது. ஒரு நபர் குற்றம் புரிந்தால் அதற்கான சட்டம் இல்லாமல் அதிகபட்ச தண்டனையை அளிக்காமல் இது பாதுகாக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் மூன்று ஏற்பாடுகள் (PROVISIONS) உள்ளன.
1. EX- POST FACTO LAW :
ஒரு நபர் ஒரு குற்றம் புரிந்தால், அந்த குற்றத்திற்கான தண்டனை ஏற்கனவே இயற்றி இருக்க வேண்டும். அப்படி, அந்த குற்றத்திற்காக புதிதாக ஒரு தண்டனை சட்டதை உருவாக்கினால் அந்த நபரை TRAIL முறையில் மட்டுமே தண்டிக்க முடியும். குறிப்பிட்ட குற்றத்திற்கு 7 ஆண்டு சிறை தண்டனை என்றால் அதை மட்டுமே தரமுடியும், மாறாக 14 ஆண்டுகள் தர இயலாது.
2. NO DOUBLE JEOPARDY :
ஒரு நபர் குற்றம் புரிந்தால் அந்த குற்றத்திற்காக ஒரு முறை மட்டுமே தண்டிக்க முடியும். ஒரு குற்றத்திற்காக ஒரு முறை மட்டுமே தண்டிக்க முடியும்.
3. NO SELF – INCRIMINATION :
ஒரு நபர் குற்றம் புரிந்தால் அதற்கான சாட்சியாக குற்றம் புரிந்தவரே இருக்க கூடாது. குற்றவாளி தனக்கான சாட்சியாக இருக்க கூடாது.