Main Menu

What’s New?

Connect With Us

சில்க் ஸ்மிதா இறுதி காலம் : மரணமடைந்து 25 ஆண்டுகள்.

silk-sumitha
Read Carefully

SHARES

  சில்க் ஸ்மிதா, அழகே பொறாமை படும் பேரழகு. காந்த கண்கள், சொக்கி இழுக்கும் பார்வை, திராவிட நிறம் அன்றைய சினிமா ரசிகர்களை கிறங்க அடித்தது. 

ஆந்திராவில் “விஜயலட்சுமி” என்ற பெயருடன் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.   

சில மனக்கசப்பால், திருமண வாழ்வில் நிலைக்கவில்லை. சினிமாவில் நடிகையாக வேண்டும் என்ற ஆசையோடு சென்னை வந்தார். 

வந்தாரை வாழவைக்கும் தமிழகம், அவருக்கும் வாழ்வு அளித்தது. ஏ,வி.எம். ஸ்டூடியோ எதிரில் சில்க் ஸ்மிதாவை சந்தித்தார் இயக்குனர் “வினுச்சக்ரவர்த்தி”. அவரின் அடுத்த படமான “வண்டிச்சக்கரம்” படத்தில் ‘சில்க்’ என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார்.    அதன் பின், தனது பெயரை ஸ்மிதா என்று மாற்றிக்கொண்டார். முதல்படத்தில் தான் நடித்த ‘சில்க்’ என்ற பெயரை சேர்த்துக்கொண்டு சில்க் ஸ்மிதா என அழைக்கப்பட்டார். 

silk-smitha

 

அதன்பிறகு, பல படவாய்ப்புகள் வரத்தொடங்கின. ஒருகட்டத்தில், சில்க்ஸ்மிதா கட்டாயம் நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் காத்துக்கிடந்தனர்.   இதனால், குறிப்பிட்ட காலத்தில் 400 திரைப்படங்களில் நடித்தார்.   கவர்ச்சி வேடங்களில் மட்டுமே அவரை நடிக்க அழைத்ததால் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உள்ள படங்களில் நடிக்க தொடங்கினார். 

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை, மூன்றாம் பிறை, நேற்று பெய்த மழை போன்ற படங்களில் நடிப்பில் முத்திரை பதித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்தார் சில்க் ஸ்மிதா. குறிப்பாக, மலையாள சினிமாவில் நடிக்க அதிக ஆர்வம் கொண்டார். ஏனெனில், அங்கு நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் கூறினார்.  கவர்ச்சி நடிகையாக இருந்ததால், பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாகவும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

 

silk sumitha

 

திரைத்துறையில் மட்டுமல்லாமல் இவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் திமிர் பிடித்தவர் என அறியப்பட்டார்.  குறிப்பாக,  அன்றைய முதல்வர் எம்.ஜிஆர். அவர்களின் விழா ஒன்றில் கலந்துகொள்ள மறுத்தது. சிவாஜி கணேசன் அவர்களின் படப்பிடிப்பில் எழுந்து நின்று மரியாதை செலுத்தாதது போன்றவை உதாரணம். 

Silk Smitha

 

 

அவர் சம்பாதித்த பணம் பெரும்பாலும், ஆந்திராவில் பண்ணையர்களுக்கு எதிராக போராடிய மக்களுக்கு செலவழித்தார். இவரின், திரைவாழ்க்கை மிகவும் மர்மமாக இருந்தது போல தனிப்பட்ட வாழ்க்கையும் மர்மம் தான். குறிப்பாக இவரின் மரணம் பற்றிய விஷயங்கள் மர்மமாகவே உள்ளது. 

 

silk sumitha

 

சில்க் ஸ்மிதாவின் மரணம் :

இவரின் மரணம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். யாருமின்றி அனாதையாக இறந்து கிடந்தார். பலமணி நேரம் கழித்துதான் அவரின் உறவினர்கள் அவரின் உடலை பெற்றுக்கொண்டனர்.  குறிப்பாக, தாடிக்கார டாக்டர் என்றழைக்கப்படும் ஒரு நபர் சில்க் ஸ்மிதாவின் இறுதி கால நண்பர். இவர் சில்க் ஸ்மிதாவை கடைசி காலத்தில் ஏமாற்றினார் என்ற ஒரு கதையும் உண்டு.

சில்க்ஸ்மிதா கடைசியாக தனது தோழி “அனுராதா”வுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் தனது மனதில் உருத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை  கூற அழைத்துள்ளார். ஆனால், அனுராதா வருவதற்குள் சில்க்ஸ்மிதா தூக்கில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடைசி வரை அவரின் மரணத்திற்கு என்ன காரணம் உறுதியாக தெரியவில்லை. 

Silk Smitha -

 

சில்க் ஸ்மிதா 1996 -ல் தனது 35 வயதில் மரணமடைந்தார். மறைந்து 25 ஆண்டுகாலம் ஆகியும் அவரின் நடிப்பும்,   அவரின் கவர்ச்சியான கண்களும் ரசிகர்களின் மனம் நீங்காமல் உள்ளது.

இவரின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை பல திரைப்படங்கள், தொடர்கள், இணையவழி தொடர்களாக வெளியாகியுள்ளன.   இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சில்க் ஸ்மிதாவுக்காக ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். 

 

 

 

Top