
"கிரீன் இந்தியா சேலஞ்சு"
என்கிற பிறர் மரக்கன்று நடவேண்டும் என்கின்ற சேலஞ்சை திரையுலகினர் மத்தியில் பிரபலம்.ஒருவர் மரக்கன்று நடவேண்டும், நட்ட பின் பிறரை குறிப்பிட்டு நீங்களும் நட வேண்டும் என்று சேலஞ்சு செய்வார்கள்.பெருபாலும் இதனை பெருமையாக ஏற்று மரக்கன்று நட்டு பிறருக்கும் சேலஞ்சு செய்து விடுவார்கள்.இதுபோல் பிரபாஸ்,ரஷ்மிக்கா,,சமந்தா,நஸ்ரியா,சாய் பல்லவி,அமலா,அர்ஜுன்,போன்ற பலரும் சேலஞ்சை ஏற்று மரக்கன்று நட்டு வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் தெலிங்கு நடிகர் மகேஷ் பாபு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்க்கு சேலஞ்சு விட்டார்.இதனை யாரும் சற்றும் எதிர் பாராத வகையில் நடிகர் விஜய் சேலஞ்சை ஏற்று மரக்கன்று ஒன்றை நட்டுள்ளார்.இதன் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளைங்களில் வைரலாகி வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடிய தெலிங்கு நடிகர் மகேஷ் பாபு,மரக்கன்று நட்டும் புடைப்படத்தை டுவிட்டரில் பகிர்த்தார். அதில் கூறியிருப்பதாவது:
“எனது பிறந்தநாளை கொண்டாட இதை விட சிறந்த முறை இல்லை.நான் “கிரீன் இந்தியா சவாலை” நடிகர்கள் விஜய்,ஜூனியர் என்.டி.ஆர்,நடிகை ஸ்ருதி ஹாசன்,ஆகியோருக்கு விடுகிறேன்.எல்லைகள் கடந்து இந்த சங்கிலி தொடரட்டும்.இதற்கு ஆதரவு தாருங்கள்.பசுமையான உலகை நோக்கி செல்வோம்”என்ற பதிவையும் வெளியிட்டார்.

இதனை ஏற்று ஜூனியர் என்.டி.ஆர்,மற்றும் நடிகை ஸ்ருதி ஹாசன் சேலஞ்சை ஏற்று மரக்கன்று நட்டனர்.தற்போது நடிகர் விஜய்யும் நட்டுள்ளது அவரது ரசிர்கர்களை மரக்கன்றுகளை நட தூண்டியுள்ளது.மேலும் இயற்கை ஆர்வலர்கள் மத்திலையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.