Main Menu

What’s New?

Connect With Us

சத்தம் போடாமல் விலை ஏறும் மாத்திரைகள்!

Read Carefully

SHARES

பொதுவாகவே உயர் சிகிச்சையின் மாத்திரைகளின் விலைகள் சற்று அதிகம் தான்.அரசு மருத்துவமனைகளில் கூட உயர் சிகிச்சைகளுக்கு மாத்திரைகள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை.வெரும் பேராஸ்டமால் மாத்திரைகளை மட்டுமே அதிகளவில் பயன்படுத்த வருக்கின்றனா்.

உதாரணத்திற்கு:
அரசு மருத்துவமனைகளில் ஒருவருக்கு இருதய அறுவைச்சிகிச்சையோ,அல்லது வேரேனும் உயர் அறுவைச்சிகிச்சைகளை செய்துக்கொண்டாலோ,அறுவைச்சிகிச்சை செய்த இடம் புண்னாக இருக்கும்.அதனை ஆற்ற வைக்க ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவர்கள் எழுதிக்கொடுத்து வெளியில் இருக்கும் மருந்துக்கடையில் வாங்கி வரும் படி கூறுகிறாா்கள்.அது போல் போதிய மருந்தும் அரசு மருத்துவமனைகளில் இருப்பதில்லை என்கின்ற குற்றச்சாட்டுகள் காலம் காலமாக இருந்து வருகிறது.ஆகையால் ஏழையெளிய மக்களுக்கு மருந்துகள் என்பது எட்டா கனியாகும்.

அது போல் நடுத்தர மக்களின் நிலைமைகளும் பறிதாபமே.ஆம்,வாழ்நாள் முழுவதும் அவர்கள் சம்பாதிக்கும் சம்பாதியம் மருந்துகள் வாங்குவதற்கே சரியாகிவிடுகிறது.ஒரு வீட்டில் இரு முதியவர்கள் இருந்தால் இன்னும் கடினமே.ஆக இந்தியாவின் பெரும்பாலானோா் சம்பாதிப்பது மருந்துகளுக்கே சென்றுவிடுகிறது.நடுவில் ஜென்ரிக் பிரச்சனை வேறு.ஜென்ரிக் மருந்துகள் விலை குறைவு என்று மக்கள் இதனை வாங்கி வருகின்றனா்.ஜென்ரிக் மருந்துகள் என்ன என்பதே பாதி நபா்களுக்கு தெரியாது.

ஜென்ரிக் மருந்து என்பது என்ன?

ஒருவருக்கு காய்ச்சல் வருகிறது அதனை குணமாக்க ஒரு மருத்துவா் கால்பால்,குரோசின்,என்று கம்பெனி மருந்துகளை எழுதுகிறாா்.அவருக்கு மறுநாளே குணமாகிவிடுகிறது.அதே போல் இன்னொரு மருத்துவா் பேராஸ்டமால்,புளுஜெசிக்,போன்ற ஜென்ரிக் மருந்துகளை எழுதுகிறாா்.அவருக்கு மறுநாள் இரவில் தான் காய்ச்சல் விட தொடங்கும்.இது தான் ஜென்ரிக் மருந்தின் செயல்பாடுகள்.அதனால் ஜென்ரிக் மருந்துகளை உட்கொண்டால் சரியாகாது என்பதில்லை தாமதமாகும் அவ்வளவே.

நாம் அன்றாட உண்ணும் உணவில் இருந்து உடுத்திக்கொள்ளும் உடைகள் வரை தரமானது பிரிக்கப்படுகிறது.ஆனால் நாம் உண்ணும் உணவில்,உட்கொள்ளும்,மருந்துகளில் தரமானது பிரிக்கப்படுவது வேதனையின் உச்சம்.ஜென்ரிக் மருந்துகளை அரசே ஏற்று நடத்துவது தோதனையின் உச்சம்.உயர் சிகிச்சைக்கான தரமான மருந்துகளை அரசே இலவசமாக வழங்க வேண்டும்.இது ஒரு புறமிருக்க கொரோனா காலத்தில் மக்கள் அளவில்லா துன்பங்களை சந்தித்து வரும் நிலையில் சில மருந்துகள் சத்தமில்லாமல் விலை ஏறி வருகிறது.இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன.ஆகையால் மிக விரைவாக அரசு இதன் மீது நடவடிக்கைகளை எடுத்தால் நன்றாகயிருக்கும் என்பதே மக்களின் எதிர்பாா்பாகும்…

Top