அண்ணாத்தே ரஜினி | பிக் பாஸ் 4 | பாலாவின் “வர்மா” : அப்டேட்ஸ்.

 

“அண்ணாத்தே” ரஜினிக்கு – வேண்டாமாம் :

 

annathe

 

கொரோனா ஊரடங்கின் போது, பல துறைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. அதில் திரைத்துறை மட்டும் விதிவிலக்கா! 

மத்திய, மாநில அரசுகள் பல கட்டமாக தளர்வுகளை அறிவித்தது.  அதிகபட்சம் 100 பேர் கொண்ட குழுவோடு படப்பிடிப்புகளை நடத்தலாம் என அனுமதி வழங்கியுள்ளது.

சில படங்கள் தகுந்த பாதுகாப்போடு தொடங்க இருக்கின்றன.

இதனால், பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இம்மாதம் தொடங்க இருக்கின்றன. அதில் ஒன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்தே” திரைப்படம் சில காரணத்தால் தடைப்படுகிறது. 

அண்ணாத்தே படக்குழு :

“சன் பிக்ச்சர்ஸ்” தயாரித்து “சிறுத்தை” சிவா, இயக்குகிறார்.  

இப்படத்தில் நடிகை மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், போன்ற நடிகைகள் நடிக்கின்றனர். மேலும் நகைச்சுவை நடிகர் சூரி, சதிஷ், நடிகர் பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, போன்றோரும் நடிக்கின்றனர்.  டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்த நிலையில்,  மீதமுள்ள காட்சிகள் இம்மாத இறுதியில் தொடங்க இருந்தன.

ரஜினிகாந்த் அவர்கள் அரசியல் அவ்வப்போது வருகையை பதிவுசெய்து வருகிறார். தற்போது, ரஜினிகாந்த் “அண்ணாத்தே” படப்பிப்புக்கு வர இயலாது என கூறியுள்ளார். 

தொழிலாளர்களின் நிலை :

கொரோனாவின் பரவல் குறையும் வரையில் தான் படப்பிடிப்புக்கு வரப்போவது இல்லை என கூறியுள்ளார்.

இதனால்,  படக்குழுவினர் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.   ரஜினிகாந்த் அவர்கள், 100 பேர் கொண்ட படப்பிடிப்புக்கே வருவதற்கு தயங்குகிறார் என்றால் அரசியல் பணியில் எப்படி ஈடுபடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  

படக்குழுவில் அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்த பிறகே படப்பிடிப்பை தொடங்குவர். அப்படி இருக்க அவ்வளவு பெரிய நடிகரின் பாதுகாப்பை எவ்வாறு பேணிக்காப்பர் என்பது தெரிந்ததே.  சினிமாத்துறை தொழிலாளர்களின் நிலையை கருத்தில்கொண்டு ரஜினிகாந்த் அவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

பிக் பாஸ் சீசன் 4 – விஜய் டிவியின் ப்ரோமோ சண்டை :

 பிக் பாஸ்- 4 ல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த நிகழ்ச்சியானது நேற்றுடன்  3 நாள் முடிவடைந்துள்ளது.

 விஜய் டிவி நேற்று வெளியிட்ட ப்ரோமோவில் அனித்தா சம்பத்தும், சுரேஷ்  சக்ரவர்த்தியும் மோதிக்கொள்ளும் கட்சி அமைந்துள்ளது. ஆனால் நேற்றைய எபிசோட் – ல் பெரிய சண்டையாக இல்லாமல் விரைவில் இருவரும் சமாதானம் ஆகினர்.  

சுரேஷ் சக்ரவர்த்தி அனித்தாவிடம்  செய்தி வாசிப்பாளர்களை பற்றி ஏதோ தவறாக கூறினார் என அனித்தா வாக்குவாதம் செய்தார். இந்த வாக்குவாதம் இரவில் நடந்தது.

காலையில் எழுந்தவுடன் இருவரும் புன்னகையுடன் கைகுலுக்கி சமாதானம் ஆகினர்.

 

தற்போது, விஜய் டிவி ஓரிரு ப்ரோமோக்களை வெளியிட்டுள்ளது. அதில் அனித்தா சம்பத்தும், சுரேஷ் சக்கரவர்த்தியும் மீண்டும் சண்டையிட்டு கொள்கின்றனர். இன்னொரு ப்ரோமோவில் பாலா முருகதாஸ் நான்கு பேரை eviction process – க்கு  தேர்வு செய்கிறார்.
அவர்கள், சம்யுக்தா, ரேகா, சனம் ஷெட்டி, மற்றும் கேப்பிரியல்லா. 

 

இது போன்ற ப்ரோமோக்களை வெளியிட்டு, பின்னர் ஒளிபரப்பாகும்போது வேறுமாதிரியான நிகழ்வு இருப்பதை பார்த்தால் ரசிகர்களுக்கு வெறுப்படைய செய்கிறது. TRP -க்காக இது போன்ற ப்ரோமோக்களை வெளியிட்டு ஆர்வத்தை தூண்டுகிறது.

 

 

வெளியானது பாலாவின் “வர்மா” :

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிற்கு என தனி அடையாளம் உள்ளது . ஆனால், நண்பர் விக்ரம் -ற்காக முதல் முறையாக ஒரு ரீமேக் படம் இயக்க ஒத்துக்கொண்டார். 

“அர்ஜுன் ரெட்டி” எனும் தெலுங்கு படத்தின் ரீமேக்கை  தமிழில் “விக்ரம் மகன் “துருவ்” நடிப்பில் பாலா இயக்கிய படம் “வர்மா” ஆனால் சில காரணங்களால் அப்படம் வெளியிடுவதை கைவிட்டது படக்குழு.

பிறகு அதே படத்தை வேறொரு இயங்குநரை வைத்து RE-SHOOT செய்து முடித்து “ஆதித்ய வர்மா” என்ற பெயரில் வெளியிட்டனர். அது எதிர்பார்த்தது போல் வெற்றியடையவில்லை.

தற்போது, “SIMLPY SOUTH” என்ற OTT தளத்தில் பாலாவின் “வர்மா” படத்தை வெளியிட்டுள்ளது. அதில் பாலாவின் தனித்துவம் எதுவும் இல்லை. ஏற்கனவே, பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான “சேது”படத்தின் கதைக்களமும் இது போன்றே அமைந்திருக்கும்.

ஒரு இளைஞன் தனது கோவத்தால் இழக்க கூடிய தனது காதல் வாழ்க்கை பற்றியது.  இது போன்ற கதைக்களம் பாலா முன்னர் இயங்கியதே. ஆனால் இந்த படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை அளித்தது. 

ஒருவேளை இந்த காரணத்திற்காகதான் பாலாவின்  “வர்மா” படத்தை வெளியிடவில்லையோ??   

DID YOU READ :

Body shaming did not spare even popular stars in Tamil Cinema…

FOLLOW US ON : chennaiyil facebook | chennaiyil instagram

 

 

 

 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top