குஷ்புவின் கார் விபத்து, தடையை மீறி “வேல் யாத்திரையில்” பங்கேற்பு. வேல் யாத்திரைக்காக சென்ற நடிகை குஷ்பு. இன்று காலை கடலூரில் நடைபெற இருந்த வேல் யாத்திரைக்கு தனது காரில் சென்றுகொண்டிருந்த போது மதுராந்தகம் அருகே விபத்து.
தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டனர் பாஜக வினர். ஏற்கனவே, திருச்செந்தூரில், பாஜக கட்சியினர் வேல் யாத்திரையை நடத்தினர். இதன் அடுத்த கட்டமாக, கடலூரில் நடைபெற இருந்த வேல் யாத்திரைக்கு தனது காரில் நடிகை குஷ்பு சென்றுகொண்டிருந்தார். மதுராந்தகம் அருகே கார் செல்லும்போது, லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும், காயம் ஏற்படவில்லை. இந்த விபத்தில் நடிகை KUSHBOO உயிர்த்தப்பியுள்ளார். ஆனால், சார் மோசமாக விபத்துக்குளானது.
இந்த விபத்து திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குஷ்பு குற்றம் சாட்டியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கருப்பார் கூட்டம் என்ற யூ ட்யூப் சேனலில் போடப்பட்ட கந்த சஷ்டி கவசம் தொடர்பான காணொளி பல தரப்பில் எதிர்ப்புகளை உண்டாக்கியது. கறுப்பர் கூட்டத்திற்கு பின்புலமாக இருப்பது திமுக தான் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்படுவதே இந்த “வேல் யாத்திரை” என்று பாஜக தமிழக தலைவர் திரு. எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்த வேல்யாத்திரையில் பங்குபெறுவதற்கு தமிழக பாஜக தலைவர் திரு.எல். முருகன், துணை தலைவர் திரு. அண்ணாமலை IPS அவர்கள் மற்றும் நடிகை KUSHBOO சென்றனர். அங்கு செல்லும்போதுதான், இந்த விபத்து குஷ்புவிற்கு நடைபெற்றுள்ளது.
அதன்பிறகு, வேறு காரில் சென்று வேல் யாத்திரையில் பங்குபெற்றார். தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரையில் பங்குபெற்றதால் மூன்று போரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதில், திரு. எல்.முருகன் அவர்கள் தொடர்ந்து வேல் யாத்திரை திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறியுள்ளார். மேலும், வேல் யாத்திரை ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
Also Read : லேடி சூப்பர் ஸ்டார் “NAYANTHARA” : 36 வது பிறந்தநாள் : VIGNESH SHIVAN.