விஜயகாந்த்,தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்|யார் அந்த நபர்?

red-phone

முன்பெல்லாம் சிறியவர்கள் விளையாட்டாக நடிகர்களுக்கோ,அல்லது யாருக்காவது தொலைபேசி நம்பரை டயல் செய்து பேசுவது இருந்தது.பின்னர் சில சிறுவர்கள் விளையாட்டாக குண்டு மிரட்டல்கள் விடுவதும் உண்டு.இதனையே சில சமூக விரோதிகளும் செய்யத்தொடங்கிவிட்டனர்.தங்களுக்கு பிடிக்காத நபர்களை,அது சினிமா பிரபலங்கலாக இருந்தாலும் சரி,அரசியல் பிரபலங்கலாக இருந்தாலும் சரி,அவர்களுக்கு டயல் செய்து குண்டு மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.இத்தகைய செயல்கள் தொடர்கதையாகி விட்டது.

நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று மரும நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த்,உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று அவரின் விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.விஜயகாந்தை அனைவருக்கும் பிடிக்கும்,நல்ல நடிகர் என்பதனை தாண்டி நல்ல மனிதர். அரசியல் கட்சியினர் அனைவரும் விஜயகாந்தின் மீது பற்று வைத்துள்ளனர்.அவருக்கு எதிரிகளே கிடையாது என்று கூட சொல்லலாம்.பின்னர் எப்படி மிரட்டல்கள் வருகின்றன? என்றே யோசிக்க தோன்றுகிறது.

அதே போல் நடிகர் தனுஷ் வீட்டிற்கும் குண்டு மிரட்டல் வந்துள்ளதாம்.இந்த இரு மிரட்டல்களை பற்றி போலீசார் மிக துரிதமாக விசாரணையில் ஈடுப்பட்டனர்.இதில் விஜயகாந்த் வீட்டிற்க்கு யார் குண்டு மிரட்டல் விடுத்தாரோ அவரே தனுஷ் வீட்டிற்கும் மிரட்டலை வெடுத்துள்ளார்.என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் நடிகர் தனுஷ் வீட்டில் வெடிக்குண்டு வைக்கப்பட்டிருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த தகவலின் பேரில், தனுஷ் வீட்டுக்கு மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினருடன் சென்ற போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் அது புரளி என தெரியவந்துள்ளது.அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். அண்மையில் நடிகர் சூர்யாவின் அலுவலகத்திற்கும், நடிகர் விஜய் வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top