ஆந்திராவில் வெள்ளம்|முன்பே எச்சரித்த ஜெகன் மோகன்!

ஆந்திராவில் பெய்த கன மழை காரணமாக விஜயவாடாவில் உள்ள பிரகாசம் தடுப்பணையில் கிருஷ்ணா நதி நிரம்பி வழிந்தது இதன் காரணமாக நீர்மட்டம் மிக வேகமாக அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.ஹைதராபாத்,விஜயவாடா போன்ற பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளானது.இப்பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.கோதாவரி ஆற்றில் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை,வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.மேலும் முதல்வர் அலுவலகத்தின் ஒரு அறிக்கையின்படி,கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த அறிக்கையில் நிவாரண முகாம்களை அமைக்கவும்,தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தவும்,அவசர காலங்களில் தேசிய பேரிடர் மறுமொழி படை[என்.டி.ஆர்.எஃப்] குழுக்களுடன் தொடர்புக் கொள்ளவும் என கூறினார் ஜெகன் மோகன் ரெட்டி.இத்தனை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தும் ஆந்திராவில் மக்கள் துயரத்தில் இருப்பது துரதிருஷ்ட்டவசமானது.இத்துணை நடவடிக்கைகளை எடுத்த ஆந்திர மாநிலத்துக்கே இத்தகைய கதியென்றால்?!…..

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top