கல்வி சுதந்திரத்திற்கான விழிப்புணர்வு பேரணி (FTE). கல்வி சுதந்திரத்திற்கான விழிப்புணர்வை உருவாக்க பைக் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
ROUND TABLE 159, LADIES CIRCLE 133, ROUND TABLE 3 மற்றும் LADIES CIRCLE 4 இணைந்து நடத்திய பைக் பேரணி நடத்தப்பட்டது. இதன் மூலம், முன்னுரிமையில்லாத அளிக்கப்படாத பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கட்டித்தர இருக்கின்றனர்.
நாட்டில், சிறந்த கல்வியை வழங்குவதற்கான முயற்சியை கல்விக்கான சுதந்திரத்திரம் மூலம் நிறைவேற்றிவருகின்றனர். இந்த பைக் பேரணியானது RT3,RT159, LC4 மற்றும் LC133 அமைப்புகளால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்காக நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 20 -க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்குபெற்றன.
இப்பேரணியானது, டி நகரில் உள்ள திதார் மோட்டார்ஸ் வளாகத்தில் இருந்து தொடங்கப்பட்டது. மேலும், இந்த பேரணியானது சேத்துப்பட்டு, வடக்கு உஸ்மான் ரோடு, வள்ளுவர்கோட்டம் வழியாக சென்று இறுதியாக திதார் மோட்டர்ஸை வந்தடைந்தது. பைக்கில் சென்றவர்கள் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், கொரோனா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.
இந்த நிகழ்ச்சியில், திரு.ப்ரியேஷ் [NATIONAL PRESIDENT OF ROUND TABLE INDIA], திரு.கார்த்திக் ரமேஷ் [ AREA 2 CHAIRMAN], CR.பிராச்சி ஷா [AREA 2 CHAIRPERSON LADIES CIRCLE INDIA] மற்றும் திரு. கே.பி. சிங் கோஹ்லி ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த 22 ஆண்டுகளில் RTI (ROUND TABLE OF INDIA) 3041 பள்ளிகளில், கிட்டத்தட்ட 7141 வகுப்பறைகளை கட்டியுள்ளனர். இதன் மூலம், 7.86 மில்லியன் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களின் வாழ்வினை மேம்படுத்தியுள்ளனர்.