Main Menu

What’s New?

Connect With Us

AKSHARA HASAN நடிக்கும் அடுத்த படத்தின் ட்ரைலர் : கமல்ஹாசன் வெளியீடு

Achcham Madam Naanam Payirppu”
Read Carefully
SHARES

AKSHARA HASAN நடிக்கும் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”  படத்தின் டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமல்ஹாசன்.

 

தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக்குழு அக்‌ஷரா ஹாசன் நடிக்கும்  “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழு தான். முன்னதாக விஜய் சேதுபதி இப்படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட, நடிகை ஸ்ருதி ஹாசன் படத்தின் டீஸரை வெளியிட்டு அசத்தினார்.  இதனால் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்  “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படக்குழுவினர். மேலும்   தற்போதைய அடுத்த  நிகழ்வால்  படக்குழு பேரின்ப நிலையை அடைந்திருக்கிறது. ட்ரெண்ட் லவுட்   (Trend Loud) முதல் தயாரிப்பான “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”  படத்தின் டிரெய்லரை அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில்  உலக நாயகன் கமலஹாசன் வெளியிட, இது படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

இயக்குநர் ராஜா ராமமூர்த்தி இது குறித்து கூறியதாவது….

சந்தேகமே இல்லாமல் கூறுவேன் எனது வாழ்வின் உச்சபட்ச மகிழ்ச்சியான தருணம் இது தான். இதை விட வாழ்வில் வேறென்ன பெரிய ஆசிர்வாதம் வேண்டும். இந்திய சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான உலக நாயகன் கமலஹாசன், எங்களின் கோரிக்கையை ஏற்று டிரெய்லரை வெளியிட்டது, எங்கள் மொத்தக்குழுவையும் பெரும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் ஒரு சிறப்பாக அக்‌ஷரா ஹாசனின் பிறந்த நாளில் டிரெய்லர் வெளியானது இன்னும் சந்தோஷம் தரும் நிகழ்வாகும். “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”  படக்குழு கொண்டாட்டத்தில் ஈடுபட மேலும் ஒரு காரணமும் இப்போது சேர்ந்திருக்கிறது. அமெரிக்கவில் நடைபெறும் மதிப்புமிக்க இந்திய  திரைப்பட விழாவான Caleidoscope Indian Film Festival Boston க்கு “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு நல்ல விமர்சனங்களை பெற்ற கேடி படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரே தமிழ்  திரைப்படம்  “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் மட்டும் தான் என்பது குறிப்பிடதக்கது. இப்படம் பாஸ்டன் (Boston) நகர திரையரங்குகளில் நவம்பர் 6 முதம் 8 ஆம் தேதி வரை திரையிடப்படுகிறது.

akshara hassan

 

டிரெய்லர் குறித்து இயக்குநர் ராஜா ராமமூர்த்தி கூறியதாவது….

நான் முன்பே படத்தின் டீஸர் டிரெய்லருக்கு முன்கதை சுருக்கமாக இருக்குமென்று கூறியிருந்தேன். டிரெயலர் மற்றும் டீஸர் இரண்டும் ஒரே கதையின் சிறு சிறு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெய்லரை பார்ப்பவர்கள் மீண்டும் டீஸரை ஒரு முறை கண்டிப்பாக  பார்ப்பார்கள். டிரெய்லரின் முக்கிய நோக்கம் என்பது, பவித்ரா கதாபாத்திரம் எதை நோக்கி பயணிக்கிறது என்பதை ரசிகர்களை யூகிக்க தூண்டுவதே ஆகும். பவித்ராவின் உலகை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் இந்த டிரெய்லர். பவித்ரா உலகம் எத்தகையது, அவளை சுற்றிய உறவுகள், பாத்திரங்கள் ஆகியவற்றை உணரச்செய்வதாக டிரெய்லர் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் அனைத்து பெண்களும் தன்னுள் சிறிதளவேனும் பவித்ராவை உணர்வார்கள். இது “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” முக்கிய சிறப்பம்சமாக, படத்தை பார்க்க முக்கிய காரணியாக இருக்கும். 

இப்படத்தில் அக்‌ஷரா ஹாசன் நாயகியாக நடிக்க,  பிரபல பாடகி உஷா உதூப் அக்‌ஷரா ஹாசனின் பாட்டியாக நடிக்கிறார்.  பெண்கள் கூட்டம் மிகுந்திருக்கும் இந்தப்படக்குழுவில் மால்குடி சுபா, அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ஜானகி சபேஷ் கலைராணி, ஷாலினி விஜயகுமார், சித்தார்தா சங்கர், சுரேஷ் மேனன், ஜார்ஜ் மரியன் மற்றும் கிரன் கேஷவ் நடிக்கிறார்கள். 

படத்தின் தொழில் நுட்ப குழு விபரம் 

akshara hassan

 

ஒளிப்பதிவு – ஷ்ரேயா தேவ் துபே

இசை – சுஷா 

படத்தொகுப்பு – கீர்த்தனா முரளி

புரடக்‌ஷன் டிசைன் – ஷஹானு முரளிதரன் 

உடை வடிவமைப்பு – தீமிஸ் வனேஷா 

ஒலி வடிவமைப்பு – S.அழகியகூத்தன் & சுரேன்.G

விளம்பர வடிவமைப்பு – கபிலன் 

லைன் புரடுயூசர் – கிரன் கேஷவ் 

 க்ரியேட்டிவ் புரடுயூசர் – வித்யா சுகுமாரன் 

பாடல்கள் – மதன் கார்கி

திரையரங்குகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகு திரைப்படங்கள் வெளியாவதற்கு தயாராகி வருகின்றன. சில படங்கள் OTT -ல் வெளியிடப்பட்டன. அதிலும் சில படங்கள் திரையரங்குகளில் மட்டுமே வெளியாவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றன. “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” படம் எப்போது, எவற்றில் வெளியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 


SHARES

Recent Posts

Sudha Madhavan – Artist | Traveller | Poet | Social worker

previous arrowprevious arrow
next arrownext arrow
Shadow
Slider

Newsletter

Recieve daily updates from the near-future.

By signing up, you agree to our Privacy Policy

Top