Main Menu

What’s New?

Connect With Us

அதிமுகாவின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு!

yaedappaadi
Read Carefully

SHARES

 

அதிமுகவின் பொதுச்செயலாளராகவும்,முதல்வருமான ஜெயலலிதா,2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தார்.அதன் பின்னர் யார் அடுத்த முதல்வர்  என்கின்ற குழப்பம் நீடித்தது.அனைவரும் ஒரு மனதாக ஓ.பன்னீர் செல்வத்தையே வழி மொழிந்தனர்.ஜெயலலிதாவின் தோழியான சசிக்கலா,அதிமுகாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினார்.பன்னீர் செல்வத்தை ராஜினாமா செய்யச் சொன்னார்,சசிகலா.ஓபியசும் ராஜினாமா செய்தார்.சசிகலா தான் பதவி ஏற்கும் சமயத்தில் சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதாகும் சூழல் ஏற்பட்டது.

sasikala

இதனால் தனது நம்பிக்கைக்கு கூறியவரும்,அதிமுகாவில் பல பதவிகளை வகித்தவருமான எடப்பாடி.பழனிச்சாமியை முதல்வராக்கினார்,சசிகலா.பின்னர் கைதாகி பெங்களுரில் உள்ள பரப்பரன அக்ரகாரச் சிறைச்சாலைக்கு சென்றுவிட்டார்.சசிகலாவின் உறவினர் டி.டி.வி.தினகரனுக்கும்,எடப்பாடிக்கும்,ஏற்பட்ட சண்டைகள்,ஓ.பி.யசுக்கும் ஈ.பி.யசுக்கும் ஏப்பட்ட பிரச்சனைகள்,பின்னர் ஓ.பி.யசையும் ஈ.பி.யசையும் மத்திய அரசு இணைத்து வைத்தது.பிறகு என்ன நடந்தது என்பது நாடறியும்.தற்போது வருகின்ற சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அதிமுகாவில் யார் முதல்வர் வேட்பாளர் என்கின்ற சர்ச்சை வெடித்தது.இதில்,ஈ.பி.யசுக்கும் ஓ.பி.யசுக்கும் மீண்டும் முட்டல்கள் தொடங்கின.இனி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி தொண்டர்களோ,அமைச்சர்களோ,என யாரும் பேசக்கூடாது என்று கட்டளையிட்டது,தலைமை.ஆனால் இதனை மீறி சிலர் ஓ.பி.யஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் இல்லை இல்லை…ஈ.பி.யஸ்தான் என்றும் பேசி வந்தனர்.

sattamanram

இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனை அக்கட்சியின் ஒருகிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதிமுக அலுவலகத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்,முதல் அமைச்சர் வேட்பாளராக மகிழ்ச்சியுடன் எடப்பாடி பழனிச்சாமியை அறிவிப்பதாக கூறினார்.அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.இதனால் 50 நாட்களாக நீடித்து வந்த குழப்பங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Top