எஸ்.பி.பி அவர்கள் தான் வாங்கிய விருதுகளை வைப்பதற்கே தனி வீடு ஒன்றை கட்டியுள்ளார்.
எஸ்.பி.பி அவர்கள் தமிழ் திரையுலகில் மட்டுமில்லாமல் இந்திய திரையுலகில் தனது குரலால் பல கோடி ரசிகர்களை சேர்த்தவர் பின்னணி பாடகர்.
எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மருதிவமனையியல் அனுமதிக்கப்பட்டார். சென்னையிலுள்ள MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 74.
அவர், மருத்துவமனையில் இருக்கும்போது உடல்நிலையில் சில முன்னேற்றங்கள் ஏற்படும். உடல்நிலையில் அவ்வப்போது சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் ECMO கருவியை கொண்டே பெரும்பாலும் எஸ்.பி.பி – க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரின், உடல்நிலை முன்னேறி வருவதற்கு வேண்டி தமிழ் திரையுலகம் சார்பாக ZOOM மீட்டிங் மூலம் பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பிறகு அவரின் உடல்நிலை சற்று தேரியது. கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி , மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் NEGATIVE என முடிவு வந்தது. ஆனால் அவரின் உடல்நிலை சற்று மோசமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.
சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. ஆனால் அது எதுவும் பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் இயற்கை எய்தினார். அதற்கு அவர் பல நாட்கள் மருத்துவமனையில் இருந்ததால் ஏற்பட்ட இதைய சுவாச தடையின் காரணமாக இறந்தார் என்கின்றனர் மருத்துவர்கள்.
இதனை தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அடக்கம் செய்யப்பட்டார். அவர் இறப்பிற்கு திரையுலகை சார்ந்த கலைஞர்கள், நடிகர்,நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்களும், பலர் நேரிலும், காணொளி மூலமாகவும் தங்களின் இரங்கல்களை தெரிவித்தனர். இவர் இறப்பிற்கு இளையராஜா அவர்கள் தனது ஆழ்ந்த வேதனைகளை தெரிவித்தார். எஸ்.பி.பி – யும் இளையராஜாவும் நீண்டகாலநண்பர்கள்.
அவர் திரைத்துறையில் புரிந்த சாதனைகள் பல. பெற்ற விருதுகள் பல. பெற்ற அங்கீகாரங்கள் பல. அதிலும் அவரின் குரலுக்காக 6 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இவரின் மறைவு பல கோடி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அவர் தன் வாழ்நாளில் பெற்ற விருதுகளை ஒரு வீட்டில் குவித்து வைத்துள்ளார். அதற்கென ஒரு வீட்டை கட்டியுள்ளார் எஸ்.பி.பி.
தற்போது அந்த வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Also Read: போகுதே…போகுதே…./மறைந்த காந்த குரல்!