சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இயக்கும் “என்றாவது ஒரு நாள்” : விதார்த் | ரம்யா நம்பீசன் 

endraavadhu oru naal
சைதை துரைசாமி மகன் வெற்றி துரைசாமி இயக்கும் “என்றாவது ஒரு நாள்”. சைதை துரைசாமியின் மகன் இயக்குனராக அறிமுகமாகிறார். சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி இயக்குனராக அறிமுகமாகிறார். சென்னை மாநகரின் முன்னாள் மேயர் திரு. சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி தமிழில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். 
 
endraavadhu oru naal
நடிகர் விதார்த், ரம்யா நம்பீசன் நடித்துள்ள இப்படத்திற்கு “என்றாவது ஒரு நாள்” என பெயர் வைத்துள்ளார். படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது, மனித குலத்தின் இன்றியமையாத ஒன்றாக விளங்குவது கால்நடைகள். உலகமயமாக்கல் என்ற திட்டத்தால் இடம்பெயர்வு ஆவதை பற்றிய உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் இந்த படம்.  தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தில் நடைபெறும் யதார்த்தமான வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. 
 
முக்கிய கதாப்பாத்திரத்தில் சேதுபதி படத்தில் நடித்த மாஸ்டர் ராகவன் நடித்துள்ளார். தனது தனிப்பட்ட நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த “மைனா” படம் புகழ் விதார்த் அவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 
 
பின்னணி பாடகியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் இப்படத்தில் விதாரத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். “என்றாவது ஒரு நாள்” படத்தை “தி தியேட்டர் பீப்பிள்” நிறுவனம் தயாரித்துள்ளது. என்.சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். எடிட்டர் மு.காசி விஸ்வநாதன். பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். 
இப்படம், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில், இப்படம் தியேட்டரில் வெளியாகிறது. ஒரு அரசியல் பிரமுகரின் மகன் திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளது திரைத்துறையில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
 
 

Share

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top